என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோரமண்டல் ரெயில் விபத்து"
- விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
- 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது.
சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி கவிழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கள் மீது மற்றொரு பயணிகள் ரெயில் மோதியதில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 291 பயணிகள் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர்.
ரெயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணை அறிக்கையில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்னல் மாற்றம் தொடர்பாக என்னென்ன நடந்தது? என்பது பற்றி அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மெயின் லைனில் சென்று கொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்த பாதைக்கு திரும்பியது ஏன்? என்பது பற்றியும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிக்னல் மாற்றத்தை கவனித்து இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்டேசன் மாஸ்டரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரெயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? என்பது பற்றி அந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதுபற்றி மற்றொரு குழு விசாரணை நடத்தி வருகிறது.
- ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
- பீகார் சென்ற தமிழ்நாடு அதிகாரிகள் ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.
சென்னை:
ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ரெயில் விபத்தில் தமிழர்கள் யாரேனும் சிக்கினார்களா என்பதை அறியவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பீகாருக்கு அனுப்பியது. பீகார் சென்ற தமிழ்நாடு அதிகாரிகள் ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.
இந்நிலையில், பீகார் சென்ற அதிகாரிகள் அங்கிருந்து நேற்று இரவு சென்னை திரும்பினர். அவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விபத்துக்குள்ளான சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த தமிழர்களில் 17 பேர் ரெயிலில் ஏறவில்லை. மீதி நபர்கள் அனைவரையும் தமிழ்நாடு அவசர உதவி மையம், ரெயில் போலீஸ், தமிழ்நாடு காவல்துறை என அனைத்து வழிகளிலும் தொடர்புகொண்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.
6 பேரை மட்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஏனென்றால் அவர்கள் கவுன்டர்கள் மூலமாக டிக்கெட் வாங்கி இருந்தார்கள். அவர்களின் மொபைல் எண்கள் கிடைக்கப் பெறவில்லை. எனினும் அவர்கள் பயணித்த ரெயில் பெட்டியில் பயணித்த சக பயணிகளிடம் தொடர்புகொண்டு அந்தப் பெட்டியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளோம்.
மருத்துவமனைகளில் 382 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் யாரும் இல்லை. எனவே இதுவரை கிடைத்த தகவல்படி தமிழர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அனைவரும் அவரவர் இடங்களுக்குச் சென்றுள்ளனர். நேற்று மட்டும் ஒரே ஒரு நபர் தனியாக சென்னைக்கு தனி ரெயில் மூலம் காயங்களுடன் வந்தார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவித்தனர்.
- இந்த விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக கட்டாக் காவல் நிலையம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரெயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின.
- விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது.
சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.
- ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
- விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
- விபத்தில் காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
- சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றன.
காயமடைந்த 800க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன.
30 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 700 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் விமானப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
- ஒடிசாவின் பாலசோர் அருகே பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
- இதில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இதில் 15 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 2 பெட்டிகள் தடம்புரண்டன. மேலும் அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலும் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் 120க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றன.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 ரெயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஹவுரா-பூரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-பெங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஹவுரா-சென்னை மெயில் உள்ளிட்ட 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 7 ரெயில்கள் டாடா நகர் ரெயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
- கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
- தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது.
புவனேஷ்வர்:
கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஒடிசாவின் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் கோரமண்டல் ரெயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம்புரண்டன.
தடம் புரண்ட விரைவு ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா ரெயில் மோதியது. இதில் ஹவுரா ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.
மேலும், சரக்கு ரெயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்