search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிருப்தி"

    • வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

    2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.

    ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சரை கலெக்டர் அழைத்து செல்லாததால் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்தனர்.
    • அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    தமிழக அரசின் நிலமீட்பு நடவடிக்கை தொடர்பாக பேட்டி அளிப்பதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் ஜெயசீலன் அலுவலகத்தில் இல்லை. இந்த நிலையில் அமைச்சர் மட்டும் தனியாக பேட்டி அளித்து சென்றார்.

    கலெக்டர் ஜெயசீலன் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் ஆய்வு பணிக்காக சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடக்கும்போது அமைச்சர் பங்கேற்றால், கலெக்டர் அவரை வரவேற்று அழைத்து செல்வது மரபு.

    அதன்படி அமைச்சர் கலெக்டர் வருகைகாக காரில் சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் கலெக்டர் வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் விருந்தினர் மாளிகைக்கு சென்று விட்டார். அமைச்சரை கலெக்டர் அங்கு சென்று சந்தித்தார். அப்போது, ஏன் அரசு நடைமுறைகளை மாற்றுகிறீர்கள்? என்று கலெக்டரிடம் அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதன் பின்னர் அமைச்சரை கூட்டத்திற்கு கலெக்டர் அழைத்து சென்றார். அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மூத்த அமைச்சரை கலெக்டர் வந்து கூட்டத்திற்கு அழைத்து செல்லாததால் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • திருப்புல்லாணி யூனியன் கூட்டம் பெயரளவில் நடந்தது.
    • பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் புல்லாணி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் சிவலிங்கம் பங்கேற்ற மறுப்பு தெரி வித்து பார்வையாளர் அமரும் இடத்தில் உட்கார்ந்தார்.

    கூட்டம் தொடங்கிய வுடன் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் பேசுகையில், 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தற்போ தைய திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையாவின் மனைவி கமலா தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

    இதற்கு முழு ஆதாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பதிவேட்டில் உள்ளது. அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக போலியாக கையொப்பம் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

    அவருக்கு ஆதரவாக துணை சேர்மன் சிவலிங்கம், காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆகியோர் போலி கையொப்பம் தவறா னது என்று தெரிவித்தனர்.அப்போது வெளியே நின்றிருந்த சிலர் கோஷ மிட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் திருமுருகன் ஆவேசமாக சேரை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

    அவரை தொடர்ந்து கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவர் வெளி நடப்பு செய்தனர். பின்னர் 5 கவுன்சிலர்கள் மற்றும் தலைவர் மட்டுமே பங்ேகற்ற கூட்டரங்கில் சிறிது நேரம் விவாதம் நடந்தது. இதையடுத்து பெயரளவில் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் முடிந்தது.

    மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டிய யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்களின் நடவடிக்கை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. பொது மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்காமல் தேவையில்லாத விவாதங்களை கூட்டத்தில் எழுப்பி பிரச்சினை செய்தது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ×