search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடர்"

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 சுழற்பந்து வீச்சாளர்க பந்து வீசினர்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் 4 போட்டிகள் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 309 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடி ஆஸ்திரேலியா அணி டக்வொர்த் லீவிஸ் முறைபடி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.

    மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி ஒரு போட்டியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உபயோகித்துள்ளனர். அதமட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து 194 பந்துகளை வீசி சாதனை படைத்துள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஹாரி புரூக் அரை சதம் கடந்தார்.

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது.

    இதையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது பென் டக்கெட், ஹாரி புரூக் மற்றும் பில் சால்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார்.

    முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 310 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹாரி ப்ரூக் 312 ரன்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள்

    312 - ஹாரி புரூக் (இங்கிலாந்து, 2024)

    310 - விராட் கோலி (இந்தியா, 2019)

    285 - எம்எஸ் டோனி (இந்தியா, 2009)

    278 - ஈயோன் மோர்கன் (இங்கிலாந்து, 2015)

    276 - பாபர் அசாம் (பாகிஸ்தான், 2022)

    • 20.4 ஓவரின்போது மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் ஆட்டம் நடைபெறவில்லை.
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அப்போது ஆஸ்திரேலியா 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பிரிஸ்டோலில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து பென் டக்கெட் (107) சதத்தால் 309 ரன்கள் குவித்தது.

    பின்னர் 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 58 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

    கேப்டன ஸ்டீவ் ஸ்மித் 48 பந்தில் 36 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 20 பந்தில் 28 ரன்களும் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

     இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்கள் வீசப்பட்டால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும். இங்கிலாந்து 4 பந்துகள் அதிகமாக வீசியதால் விதி பயன்படுத்தப்பட்டு இங்கிலாந்து தோல்வயிடைந்தது.

    டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பிரிஸ்டோல்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப் சால்ட் 27 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த பென் டக்கெட், ஹாரி புரூக் ஜோடி அதிரடியில் மிரட்டியது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையைல ஹாரி புரூக் 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் போராடிய அடில் ரஷித் 36 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    • இங்கிலாந்து வீரர்கள் டக்கெட், ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் ஆகியோர் அரைசதம்.
    • ஆஸ்திரேலியா 126 ரன்னில் சுருண்டு பரிதாபம்.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 8 ஓவரில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க ஜோடி 8.4 ஓவருக்கு 68 ரன்கள் விளாசியது. மிட்செல் மார்ஷ் 34 பந்தில் 28 ரன்களும், டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் மளமளவென சரிந்தது. 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 126 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா கடைசி 58 ரன்களுக்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-2 என சமநிலை செய்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை பிரிஸ்டோலில் நடக்கிறது.

    • ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது.
    • நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.

    இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நேற்று டிஎல்எஸ் முறையில் தோல்வி அடைந்தது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து டி.எல்.எஸ். முறைப்படி வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 77 ரன்னும், ஸ்டீவ் சுமித் 60 ரன்னும், ஆரோன் ஹார்டி 44 ரன்னும், கேமரூன் கிரீன் 42 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் ஜோடி பொறுப்புடன் ஆடி 156 ரன்களை சேர்த்தது. வில் ஜாக்ஸ் அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹாரி புருக் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 37.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூல ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-2 என பின்தங்கி உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    • இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இலங்கையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி.

    இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இத்தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

    இந்நிலையில், தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற 2 ஆவது அணி என்ற சாதனையை இதன்மூலம் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    இதற்கு முன்னதாக ஜூன் 2023 முதல் அக்டோபர் 2023 வரை இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

    2003 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அலெக்ஸ் கேரி 74 ரன்னும், மிட்செல் மார்ஷ் 60 ரன்னும் எடுத்தனர். மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் தலா 29 ரன்கள் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், ஜேக்கம் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. ஜேமி ஸ்மித் ஓரளவு தாக்குப் பிடித்து 49 ரன் எடுத்தார். பென் டக்கெட் 32 ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹார்டி, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 315 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் வெற்றி பெற்றது.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி 315 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 95 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி சுமித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய சார்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
    • இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாட்டிகாமில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இதனால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 2 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கூப்பர் கன்னோலி கூடுதல் வீரராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் வேகப்பந்து வீச்சாளர் மஹில் பியர்ட்மேன் மாற்று வீரராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பியர்ட்மேன் சிறப்பாக பந்து வீசி 15 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 19 வயதான அவர் 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.

    வேகப் பந்துவீச்சாளர்களான சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மெரிடித் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது கன்னோலி பியர்ட்மேன் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • முதல் இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றது.
    • மழையால் 3-வது டி20 போட்டி ரத்தானது.

    மான்செஸ்டர்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகன் விருது வென்றார்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் தொடர் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    ×