search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ட்"

    • 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார்.

    உலகத்தில் பல்வேறு நாடுகளில் கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் முதலாளித்துவத்தின் மகுடமாக விளங்கும் அமெரிக்கவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    புளோரிடா மாகாணத்தின் சம்டர் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் வேண்டும் என்று மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகையையெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

    இதனால் சற்று பொறுமை இழந்த மைக்கேல், 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரியை மிரட்டியதற்காகவும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . 

    • நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் அனுமதி
    • பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள நிலையில், இவ்வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தான் சேதமடைந்த பழைய வீடுகளை சீரமைப்பதற்கு விதிகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

    கடந்த 11-4-2023 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது இது குறித்து நான் பேசினேன். அப்போது நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் 2019-ம்  ஆண்டில் அப்போது ஆட்சியில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் கம்பைன்டு டெவலப்மெண்ட் அன்ட் பில்டிங் ரூல்ஸ் 2019 என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்த சட்ட அடிப்படையிலேயே ஒரு சென்ட்டுக்கு குறைவான நிலங்களும், அதே போல் 3 அடிக்கு குறைவான தெருக்களும் இருக்கின்றன. அவர்கள் கட்டிட அனுமதிக்கு சென்றால் இதுவரையில் கிடைக்கவில்லை. கிட்டத் தட்ட 3 ஆயிரம் விண்ணப்பங்கள் அரசிடம் பெண்டிங்கில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் வீடு கட்ட முடியவில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அவர்களால் வீடு கட்டுவதற்கு ஒரு செங்கல் கூட வாங்க முடியவில்லை என பேசினேன்.

    அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி பதிலளித்து பேசும் போது, கண்டிப்பாக கவனிக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசால் அலுவலர்கள் அடங்கிய கமிட்டி போடப்பட்டு அவர்களும் நாகர்கோவில் வந்து, குறுகிய தெருக்களையும், ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் அமைந்துள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடனடியாக துறை அமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுத்து நாகர்கோவில் மாநகராட்சியில் குறுகிய இடங்களில் ஒரு சென்ட்டுக்கு குறைவான இடங்களில் வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பித்துள்ள மக்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி வாயிலாக கட்டிட அனுமதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வழங்கும் விதிகளில் மக்கள் நலன்கருதி சலுகைகள் அளிக்கப்பட்டன. இந்நிலை மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

    ×