என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்தல்"

    • விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும்.
    • இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
    • கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    எதிர்ப்புக்கு மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்த அவர் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில், கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று எச்சரித்தார். மேலும் ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

    இந்தியா, காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் கசப்பான உறவை கொண்டுள்ளதால் தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது என கனடா கணித்துள்ளது.

    அதே நேரத்தில், பாகிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை எதிர்ப்பதற்கும் அதன் மூலோபாய நோக்கங்காக, கனடா பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடக்கூடும் என்று கனடா தெரிவித்துள்ளது.

    • ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
    • கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும்.

    கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடும் எதிர்ப்பு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து கடந்த 9-ந்தேதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.

    தொடர்ந்து கனடா பாராளுமன்றத்தை முன்கூட்டியே களைத்த பிரதமர் மார்க் கார்னி, ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஞாயிறு அன்று அறிவித்தார்.

    இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளராகளை சந்தித்து பேசுகையில் இந்தியா மற்றும் சீனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் கூறியதாவது, கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    கனடாவில் உள்ள இன, கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

    அதேபோல், ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் கனடாவின் ஜனநாயக நடைமுறைக்கு இது பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

    காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் இந்திய அரசுக்கு தொடர்புள்ளதாக 2023இல் அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதன் பின் கனடா - இந்தியா உறவில் ஏற்பட்ட விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கனடாவின் தற்போதைய குற்றச்சாட்டுக்கு, இந்தியா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

     

    • பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
    • பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

    ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

    இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் கிரியாகோஸ் வெற்றி பெறுவார் என அங்குள்ள கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    • மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றார்.
    • ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த ஆயுதப் போராளிகளும் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

    அண்டை நாடான மியான்மரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் 4 வருட ராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மியான்மரின் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளார் என மியான்மர் அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    மியான்மரின் ராணுவ அரசுக்கு ஆதரவாக இருக்கும் நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மின் ஆங் அங்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

    அதில் அவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் கூறியுள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மியான்மரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

    ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும்  மியான்மர் ராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு, ராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ×