என் மலர்
நீங்கள் தேடியது "நாஞ்சில் சம்பத் பேச்சு"
- கூடலூர் நகர தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.
- தமிழ்நாடு முன்னேற விடாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
கவுண்டம்பாளையம்,
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகர தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதற்கு கூடலூர் நகர மன்ற தலைவரும், செயலா ளருமான அறிவரசு தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ் வரவே ற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், கூடலூர் நகராட்சி துணை தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்க ளாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிக் கொண்டி ருக்கிறார். அவரது பணிக ளுக்கு அனைவரும் உதவியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு முன்னேற விடாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை நாம் முறியடித்தாக வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றி, வரும் தேர்தலில் பா.ஜ.க. அரசை வீழ்த்தி ஆக வேண்டும்.
அப்போதுதான் தமிழ்நாடு இன்னும் உன்னத நிலையை அடையும். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்போரை நசுக்கும் நட வடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது. இது மிகவும் கண்டி க்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தலைமை கழக பேச்சாளர்கள் திருப்பூர் கூத்தரசன், உடுமலை தண்டபாணி, நரசிம்ம நாயக்கன்பா ளையம் நகர செயலாளர் ஸ்ரீதரன், கூடலூர் நகர துணைச் செயலாளர் கிரேசி, செல்வி, நகர பொருளாளர் சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிர மணியம் , நகர இளைஞரணி அமை ப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் உதயகுமார், பாலச்சந்திரன், வக்கீல் பிரபு மற்றும் கூடலூர் நகர கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூடலூர் நகர துணைச் செயலாளர் துரை.செந்தில்குமார் நன்றி கூறினார்.
- சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
- பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'இது பெரியார் மண்' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.
பெரியாரை கொச்சைப்படுத்தி கல் எறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என நாம் தமிழர் கட்சி இருக்கிறது என நினைக்கிறேன். சீமான், பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்தால், எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும்.
பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்வது ஏன்?. ஈனபையன் சீமான் பெரியார் பற்றி தவறாக பேசுகிறார். எங்கே சோறு கிடைக்கும் என்று பா.ஜ.க தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
திராவிட இயக்கத்தை ஏன் பா.ஜ.க குறி வைக்கிறது என்றால், பெரியார் திராவிட இயக்கத்தினை முன் வைத்து வழிநடத்திச் செல்வதால் தான். சீமான் திராவிடத்தையும், தமிழ் தேசியம் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா? திராவிடம் என்றால் தாலாட்டு குழந்தை போன்று தெரிகிறதா?.
சீமான், ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.400 கோடியும், பா.ஜ.க.விடம் இருந்து ரூ.300 கோடியும் வாங்கினார். தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம் சீமானிடம் உள்ளது. பெரியார் பற்றி கொச்சையாக சொன்னதற்கு சீமானிடம் ஆதாரம் இருக்கிறதா?
பிரபாகரனை சீமான் சந்தித்தாராம்? சந்தித்தவர்கள் யாரும் சொல்லவில்லை. உலகத்தில் நிகரற்ற வீரன் நேற்றும், இன்றும், நாளையும் பிரபாகரன் தான்.
சீமான் பா.ஜ.க.வின் கைக்கூலி, அடியாள் என 10 வருடமாக சொல்லி வருகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது. கட்சியின் இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான் நடக்கும்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையே இறக்குமதி செய்யப்பட்டவர் தான். ஆனால் எப்போது அவர் ஏற்றுமதி செய்யப்படுவார் என்று அந்த கட்சியில் இருப்பவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
முருகனை வைத்து சீமான் அரசியல் செய்யலாம் என்று பார்க்கிறார். ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று சொல்லும் அண்ணாமலை, எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என அவரே சொல்லட்டும்.
கூவம் பாவத்தை போக்கினால் போக்கும், நத்தை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறும். ஆனால், பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது. பா.ஜ.க.விற்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது, கிடைக்க விடமாட்டோம்.
அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினாலும், பயப்பட மாட்டோம். பெரியார் கொள்கை மீட்டெடுக்க சாவக்கூட தயார். 100 ஆண்டுகள் கடந்தும் பெரியார் வாழ்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.