என் மலர்
நீங்கள் தேடியது "சிவராஜ்சிங் சவுகான்"
- பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
- சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது.
சித்தி மாவட்டத்தின் பஹ்ரி அருகே உள்ள குப்ரி என்ற கிராமத்தை சேர்ந்த பிரவேஷ்சுக்லா என்பவர் தான் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தது என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரான தஸ்மத் ராவத்தும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
இதற்கிடையே பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ராகுல்காந்தியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, 'குற்றவாளிக்கு மதம், சாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக அவர் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றப்பட மாட்டார் என்றார்.
அதை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பிரவேஷ் சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரின் காலை கழுவி முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்தார்.
இன்று காலை பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை நாற்காலியில் உட்கார வைத்து முதல்-மந்திரி சவுகான் கீழே அமர்ந்து காலை கழுவினார். அதோடு நடந்த சம்பவத்துக்காகவும் பழங்குடியின வாலிபரிடம் முதல்-மந்திரி மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
- ஜார்க்கண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் நிலவும் இருள் மறைந்து விரைவில் மாற்றம் வரும் என்றார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பஹரகோரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் நடைபெறுவது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆட்சி அல்ல, ஹேமந்த் சோரனின் குற்றம், கொலை, கொள்ளை அரசு என காட்டமாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
இந்தக் கூட்டத்துக்கு மேகங்கள் திரண்டு வந்து நெருக்கடியாக உள்ளன. ஆனால் இந்த மேகங்களை விட ஹேமந்த் சோரன் அரசு பெரிய நெருக்கடியாக உள்ளது.
இது ஜே.எம்.எம். அரசு அல்ல, ஹேமந்த் சோரன் நடத்தும் குற்றம், கொலை, கொள்ளை அரசு.
ஜார்க்கண்டில் நிலவும் இருள் மறைந்து விரைவில் மாற்றம் வரும்.
மேகங்கள் பொழிகின்றன, மின்னல்கள் மின்னுகின்றன, கனமழை பெய்கிறது, ஆனால் இன்னும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள்.
இதைப் பார்த்தால் விரைவில் இருள் மறையும், சூரியன் உதிக்கும். தாமரை மலர்ந்து மாற்றம் வரும் என தெரிவித்தார்.
- உடைந்த சீட்களில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை.
- இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட 8 சி சீட் சேதமடைந்து இருந்தது.
இதுதொடர்பாக, சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் வலைதளத்தில், போபால்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த சீட் கொடுக்கப்பட்டதாக பதிவிட்டார்.
அதில், நான் போபாலில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்ய இருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்திருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட 8 சி இருக்கை சேதமடைந்து இருந்தது. சக பயணிகள் இருக்கையை மாற்றி அமரும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் வேறு எந்த நபருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன்.
டாடா நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு ஏர் இந்தியாவின் சேவை மேம்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அபப்டி எதுவும் நடக்கவில்லை. பயணிகளிடமிருந்து முழுத் தொகையையும் வசூலித்த பிறகு, மோசமான மற்றும் வலிமிகுந்த இருக்கைகளில் அவர்களை உட்கார வைப்பது நியாயமில்லை. இது பயணிகளை ஏமாற்றும் வேலை இல்லையா?
ஏர் இந்தியா நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் தடுக்க இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.