என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "5 ஆண்டுகள்"
- கட்டி முடித்து 5 ஆண்டுகளாகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வரவில்லை.
- அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அங்கன்வாடி மையத்தால் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி யுள்ளது.
அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே கடந்த 2022-23-ம் ஆண்டில் அங்கன் வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.
மேலும் பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாக திறக்கப்ப டாமல் உள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தை களை தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகா ரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தை களை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
- இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது வங்கியில் நடந்த கூட்டுறவு வாரவிழா பதிவேடுகளை தணிக்கை செய்தபோது, ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 713 முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் வங்கி மேலாளர் ராமமூர்த்தி, வங்கி உதவி மேலாளர் ராமசாமி, முதுநிலை உதவியாளர் பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.
இந்த விசாரணையின் போது, கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 3 பேரையும் விடுவித்து 2013-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸ் தரப்பில் 2014-ம் ஆண்டு மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
5 ஆண்டுகள் சிறை
இதனிடையே வழக்கு தொடர்புடைய ராமமூர்த்தி, ராமசாமி ஆகியோர் அடுத்தடுத்து திடீரென இறந்து விட்டனர். இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை மாஜிஸ்திரேட்டு கேட்டதால் அதனை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெருமாளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ஜெகநாதன் உத்தரவிட்டார்.
கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்