search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறு வாக்குப்பதிவு"

    • நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும், மதுராபூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூன் 3) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

     

    நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து பாஜக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மறு வாக்குப்பதிவானது இன்று நடத்தப்படுகிறது. 

    • மணிப்பூர் உள்பட 13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து மறுதேர்தல்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர்.

    தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட வாக்குப்பதிவை மே 7-ம் தேதி நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.
    • இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 11 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 19-ந்தேதி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    மேலும், ஒரு சில இடங்களில துப்பாக்கிச்சூடு சம்பவமும், மிரட்டல் தொடர்பான சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் 11 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று இம்பால் கிழக்கு தொகுதிக்கு உடபட்ட மொய்ராங்காம்பு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

    • மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்.
    • அங்கு 72 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் மணிப்பூரில் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்கு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன.

    இதையடுத்து, 47 தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் 22-ம் தேதி (நாளை) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
    • அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன.

    இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

    பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார். தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன.

    திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.

    இந்நிலையில், வன்முறை எதிரொலியால் மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நேற்று மாலை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமா்ா 600 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    ×