search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பாதுகாப்புப்படை"

    • கால்நடை தடுப்பு வேலி அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • ஆட்சேபனை தெரிவித்ததால் வீரர்கள் வேலி அமைக்கும் பணியை கைவிட்டுள்ளனர்.

    இந்தியா- வங்கதேச நாடுகளின் எல்லை மேற்கு வங்க மாநிலத்தில் பல நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து கிடக்கிறது. எல்லையில் இருநாட்டு பாதுகாப்புப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையைிலான அரசு கவழிந்த பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இந்தியா- வங்கதேசம் எல்லை அமைந்துள்ளது கூச்பெஹாரில் கால்நடை தடுப்பு வேலி அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது வங்கதேச எல்லை பாதுகாப்பு காவலர்கள் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் வீரர்கள் வேலை அமைக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதன்காரணமாக கூச்பெஹார் எல்லைப் பகுதியில் பதற்றமான நிலை நிலவுகிறது. இந்தியா எல்லையில் வேலி அமைக்கவில்லை. இந்திய எல்லைக்குள்தான் வேலை அமைக்கிறது. அதுவும் இரு நாட்டு ஒப்பந்தத்தின்படிதான் இந்த வேலை அமைக்கப்படுகிறது.

    இருந்தபோதிலும் வங்கதேச எல்லை காவலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் இருதரப்பு வீரர்கள் இடையே மோதல் ஏதும் ஏற்படவில்லை.

    அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு டைரக்டர் ஜெனரல்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அப்போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியா-வங்கதேசம் எல்லை 4096 கி.மீ. நீளம் கொண்டது. எல்லை தொடர்பாக இந்தியா-வங்கதேசம் இடையில் வருடத்திற்கு இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடைபெறும். கடந்த மார்ச் 5-ந்தேதி வங்கதேசத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதுபோன்ற சம்பவம் இந்த வாரத்தில் 2-வது முறையாக நடைபெற்றுள்ளதாக பாதுகாப்புப்படை வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதில் இருந்து ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்கள் அல்லது ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு வர முயற்சிக்கிறார்கள். இதனால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் எதிர்பாராத வகையில் வங்கதேசத்தின் கடல்பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களை விடுவிக்க வங்கதேச எல்லை காவலர்கள் மறுத்துவிட்டனர்.

    • மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராணுவம் இடைக்கால அரசை அமைக்க உள்ளது.

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்காளதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

    வங்காளதேசத்தில் வன்முறை வெடித்துள்ளதால் அங்குள்ளவர்கள் இந்தியாவுக்குகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் இந்தியா- வங்காளதேச மாநில எல்லையில் உயர் பாதுகாப்புக்கான உத்தரவை எல்லை பாதுகாப்புப்படை விடுத்துள்ளது. அத்துடன் எல்லை பாதுகாப்புப்படையின் பொது ஜெனரல் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் மற்ற சீனியர் கமாண்டர்கள் மேற்கு வங்காள மாநிலம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அனைத்து கமாண்டர்களுக்கும் எல்லையில் வீரர்களை குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா- வங்காளதேச எல்லை 4096 கி.மீட்டர் நீளம் கொண்டது. மேற்கு வங்காள மாநிலத்துடன் 2217 கி.மீட்டரும், திரிபுராவுடன் 856 கி.மீட்டரும், மேகலயாவுடன் 443 கி.மீட்டரும், அசாம் உடன் 262 கி.மீட்டரும், மிசோரமுடன் 318 கி.மீட்டரும் வங்காளதேசம் இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக 13-ந்தேதி பிரான்ஸ் செல்கிறார்
    • பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14-ந்தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி (நாளை மறுதினம்) பிரான்ஸ் செல்கிறார்.

    அப்போது இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்புப்படைகளால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடி பயணத்தின்போது அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    அந்த முன்மொழிவில் ஒரு இருக்கை கொண்ட 22 ரபேல் கடற்படை விமானங்கள் மற்றும் நான்கு பயிற்சி விமானங்கள் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாட்டின் கடற்பகுதி பாதுகாப்புகளை எதிர்கொள்ள, தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த விமானங்களை வாங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதேபோல் மூன்ற ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களும் வாங்க வலியுறுத்தியுள்ளது.

    தற்போது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து மிக்-29எஸ் (MiG-29s) விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து ரபேல் நடால் விமானங்களையும் இயக்க வேண்டும் என கப்பற்படை விரும்புகிறது.

    மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் பிராஜெக்ட் 75-ன் பகுதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில், மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக இந்தியா செலவிட இருக்கும் நிலையில், பேச்சுவார்த்தை இறுதியில்தான் சரியான தொகை தெரியவரும். இந்தியா தொகையை மிகப்பெரிய அளவில் குறைக்க வலியுத்து என்றும், மேக்-இன் இந்தியா தயாரிப்புகளை கொண்டு உருவாக்க வலியுறுத்தும் எனவும் தெரிகிறது.

    முன்னதாக ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட பேச்சுவார்த்தை நடைமுறை தற்போதும் தொடர வாய்ப்புள்ளது.

    பாதுகாப்புப்படையின் முன்மொழி பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டடுள்ளது. இன்னும் சில நாட்களில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் முன் இந்த முன்மொழிவு வைக்கப்பட வாய்ப்புள்ளது.

    ×