என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம் மழை"

    • நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
    • ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன.

    செஞ்சி:

    செஞ்சியில் இன்று அதிகாலை பெய்த மழையால் செஞ்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நெல் அறுவடை சீசன் என்பதால் அதிகமாக நெல் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று விற்பனைக்காக சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து திறந்த வெளியில்இறக்கி இருந்தனர். மேலும் நேற்று கொள்முதல் செய்யப்பட்ட வியாபாரிகளின் ஒரு பகுதி நெல் மூட்டைகளும் கமிட்டியின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைத்து போட படுமோ என்ற அச்சத்தில் வேதனை அடைந்தனர்.

    ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன. ஆகையால் செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து தொடங்கி மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர்.
    • கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.

    கடந்த 3.12.2024-ந்தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர். அப்போது பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியல் செய்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றனர். செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி (வயது 37) ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

    • மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது.
    • உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பல நாட்கள் ஆனது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து 2 நாட்கள் காலை நேரத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் வெயிலினால் ஏற்படும் புழுக்கம் மற்றும் அலர்ஜியில் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் வெயிலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணம்பூண்டியில் 27, சூரப்பட்டு 21, முகயைூர் 20, கெடார் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அரகண்டநல்லூர், செஞ்சி, திண்டிவனம், அனந்தபுரம், விக்கிரவாண்டி, கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. நேற்று பெய்த மழை மற்றும் பலத்த காற்றால் விழுப்புரம் நகராட்சி வடக்கு ரெயில்வே பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு முறிந்து அருகில் இருந்த புத்துமாரி அம்மன்கோவில் மீது விழுந்தது. இதனால் புத்துமாரி அம்மன்கோவில் சேதமானது. அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லை. கோவில் மரம் விழுந்து முழுவதும் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பொதுபணித்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஜனவரி மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை உப்பளத்தில் வேலை தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது மழை பெய்யும் காரணத்தால் ஜனவரி-ஜூலை மாதம் வரை உப்பளத்தில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் 2500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் முழ்கியது. இதனால் உப்பளத்தில் மழை நீர் கடல் போல் காட்சியளித்தது. இங்கு வேலை பார்க்கும் உப்பள உற்பத்தி கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு குள்ளானது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுகின்றனர். விழுப்புரத்தில் நேற்று பெய்த மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது.

    • வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
    • திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மரக்காணம்:

    வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

    கடந்த காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை தண்ணீர் நிரம்பி விவசாயிகளுக்கு பயிரிட தேவையான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அதேசமயம் மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட 25 ஆயிரம் டன் உப்பை பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

    வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வந்தது

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதலே மேக மூட்டங்களுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழையின் வேகமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த மழை இரவு முழுக்க கொட்டி தீர்த்தது. இதனால் மரக்காணம் பகுதியில் ஒரே நாளில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இந்த கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பங்கள் மூழ்கி தற்போது பெரிய ஏரி போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மரக்காணம் அருகே 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காணிமேடு, மண்டகப்பட்டு இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மரக்காணம் செல்ல வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரம்சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது . இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் அப்பகுதியில் கட்டும் மேம்பாலம் பணியை உடனடியாக கட்டி முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • அமைச்சர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
    • விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார். இதையொட்டி காலை 8.30 மணியளவில் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் அவர் தொடர்ந்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்படும் அவர் விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், விக்கிரவாண்டியில் உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்தை பார்வையிட்டு உதவ யாரும் வரவில்லை என குற்றம் சாட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
    • போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.

    அதேப்போன்று, சென்னைக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

    • ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.
    • எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின்ர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவு மழையை கண்டுள்ளது.

    * பருவமழை தொடங்குவதற்கு முன்னரே ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம்.

    * தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.

    * மீட்பு பணி குழு, தீயணைப்பு வீரர்கள் என பலரும் இணைந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.

    * 140-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    * நீர் தேங்கிய பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

    * 1.29 ஹெக்டர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    * மழை முழுமையாக நிறைவடைந்ததும் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிச்சயமாக இழப்பீடு வழங்கப்படும்.

    * துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சியர்கள் முழு அர்ப்பணிப்புடன் மீட்பு, கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    * தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொறுப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன்.

    * ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.

    * நமக்கான நிதியை ஒதுக்கவில்லை என்றாலும் எவ்வாறு சமாளிப்பது என ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

    * எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஒரு நல்ல விஷயம் நடந்தால் தான் அந்த ஊருக்கு நல்லது நடக்கும்.
    • ஒரு கட்சி தலைவர் ஏ4 ஷீட்ல எழுதி வைச்சு வாசிக்கிறாரு, இதுக்கு பேரு கட்சியா? என்றார்.

    சென்னை அடுத்த மாங்காட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மாங்காடு நகர தி.மு.க. சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட செயலாளர் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் லியோனி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, விக்கிரவாண்டில இரண்டு கிழவிகள் டீக்கடையில் பேசிக்கொள்கிறார்கள். ஒரு கிழவி சொல்லுது, இதுவரைக்கும் விழுப்புரத்தில் வெள்ளம் வந்து கேள்விபட்டு இருக்கோமா? 65 வயது ஆகுது எனக்கு. இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில விழுப்புரத்துல வெள்ளம் வந்து ஆடு, மாடு எல்லாம் அடிச்சுட்டு போனத என் கண்ணால பார்த்ததே இல்லை. ஏன் ஆத்தா இப்படி நடக்குதுன்னு கேட்டது.

    அதற்கு மற்றொரு கிழவி சொல்லிச்சு, என்னிக்கு இந்த பாழா போன பையலுங்க விக்கிரவாண்டில வந்து மாநாடை போட்டாங்களோ, அன்னிக்கு விளங்காமா போனதுதான் விழுப்புரம்-ன்னு சொன்னாங்க. நான் சொல்லல பா. இரண்டு கிழவிகள் பேசினதை ஒட்டுக்கிட்டேன் நான்.

    அதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால் தான் அந்த ஊருக்கு நல்லது நடக்கும். சாதாரணமா படிக்காதவங்க பேசிக்கிட்டு இருங்காங்க. எங்க ஊர்ல இப்படி ஒருத்தர் மாநாடு போட்டு வெள்ளத்தில எங்க ஊரு அழிஞ்சு போச்சுன்னு.

    அந்த நடிகர் பேசுகிறார் மாநாட்டில், எங்கள் கட்சியினுடைய கொள்கையின் முன்னோடிகள் யார் தெரியுமா? வேகமாக ஓடிவந்து ஒரு பேப்பர் எடுத்து கொள்கைய ஒரு கட்சி தலைவர் ஏ4 ஷீட்ல எழுதி வைச்சு வாசிக்கிறாரு, இதுக்கு பேரு கட்சியா? என்றார்.

    ×