என் மலர்
நீங்கள் தேடியது "விபத்தில் வாலிபர் சாவு"
- 3 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் விஷ்வா (வயது 25).கட்டிட மேஸ்திரி. இவர் தனது நண்பர்களான ஆகாஷ் (20) மற்றும் சஞ்சயுடன் (20) வேலை சம்பந்தமாக பைக்கில் தேவிகாபுரம் சென்றனர்.
வேலைகள் முடிந்து மீண்டும் போளூர் நோக்கி ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
மட்டபிரையூர் அருகே வரும் போது எதிரே வந்த டிராக்டரும் -பைக்கும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.
இதில் விஷ்வா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக விஷ்வா, ஆகாஷ் ஆகியோரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா பரிதாபமாக நேற்று முன்தினம் இறந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் என்பவர் நேற்று மாலை சிகிச்சையில் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
போளூர் போலீசார் ஆகாஷ் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 40).
இவருக்கு திருமணம் ஆகி, தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து அவரது மனைவி தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சிவா சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை நோக்கி சிவா தனது பைக்கில் புறப்பட்டு சென்றார்.
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சென்ற போது, நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ பின்புறத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு
- வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்றபோது பரிதாபம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வநாதன் வயது (60) இவருடைய மருமகன் கார்த்திகேயன் (25).
2 பேரும் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்தனர். அப்போது ஆம்பூர் கன்னிகாபுரம் சாலையில் சென்ற மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலே செல்வநாதன் உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் கார்த்திகேயன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.