என் மலர்
நீங்கள் தேடியது "தோரணமலை கோவில்"
- தோரணமலை முருகன் கோவிலானது அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட கோவிலாகும் ஆகும்.
- விழாவில் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
கடையம்:
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இந்த கோவில் அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமையும், பழமையும் உடைய கோவிலாகும்.
தோரணமலை முருகன் கோவில்
தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறை, ரெயில்வே காவல்துறை போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக சுற்று வட்டார கிராமப்புறம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் திறனை மேம்படுத்தும் மைதானங்கள், நீளம் தாண்டுதலுக்கான மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ள மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் எலும்பு- மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
நீளம் தாண்டுதல்
விழாவில் திரளான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்பட பயிற்சிகளை திறம்பட செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் பிரசாதம், காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் மைதானம் அமைத்துக் கொடுத்த கோவில் நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
- கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப்பட்டது.
- அவ்வப்போது மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
தென்காசி:
கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அகத்தியர், தேரையர் தங்கி வழிபாடு நடத்திய தலம். அகத்தியர் இங்குதான் முதன்முதலி்ல் பல்கலைக்கழகம் போல் பாடசாலை அமைத்தார். முதன்முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமும் இதுதான்.
இக்கோவிலில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, தமிழ்மாத கடைசி வெள்ளி வழிபாடு, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை போன்ற வையும் சிறப்பாக நடை பெறும்.
இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை, தமிழ் மாத கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆன்மிகப்பணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார். கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடத்தப்படுகிறது. தமிழ்புத்தாண்டு அன்று சிறந்த சமூக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப் பட்டது. மேலும் பொதுநல ஊழியர்களுக்கு முக்கசவசம், கிருமி நாசினியும் இலவசமாக வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைஅருளோடு பொது அறிவையும் பெற்றுச் செல்லும் வகையில் நூல்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு நூல்களும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.
மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்காக உடற்பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.
அவ்வப்போது பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.
கடந்த கோடை விடுமுறையின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி, விளை யாட்டுப்போட்டி, கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் - ஆ சந்திரலீலா வாழ்ந்த வீட்டை முத்துமாலைபுரத்தில் இலவச மாலை நேர படிப்பகமாக மாற்றி மாணவ- மாணவிகள் பயன் பெரும் வகையில் உருவாக்கியுள்ளார்கள் .
அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உலக சுற்றுலாத்தினத்தையொட்டி கடந்த 24-ந் தேதி சுற்றுலாத் துறையும், தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தோரணமலை கோவில் நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்ப கராமன் செய்திருந்தார்.