என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணா பல்கலைக் கழகம்"
- அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியர்களை பணியில் நியமித்ததாக போலியாக கணக்கு காட்டி முறைகேடு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அறிக்கை தர வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 124 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறலாமா? முறை கேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கருணை காட்டக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, துணைவேந்தரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
- இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
- இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவு களில் மட்டுமே சேருகிறார் கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர எந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.
வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. 50 சதவீதம் கட்ட ணத்தை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கல்வி கட்டணம் குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.
- முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
- மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.
இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும்.
அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
அதன்பின் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்