என் மலர்
நீங்கள் தேடியது "மணிப்பூர் கலவரம்"
- மணிப்பூர் மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை.
- திறந்திருக்கும் ஒருசில பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் வாழும் மைதிக்கள் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 3-ந் தேதி பேரணி நடந்தது.
இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து மைதிக்கள் மற்றும் குக்கி சமூகங்கள் இடையே தகராறு மூண்டு வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டவர்கள் மாநிலம் முழுவதும் கல்வீச்சு மற்றும் வாகனங்களுக்கு தீவைத்ததில் பொது சொத்துக்கள் சேதம் அடைந்தது.
வன்முறை மற்றும் கலவரத்தில் இதுவரை 98-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரம் பாதித்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிரடிப்படையினர் விரைந்து சென்று பாதிப்புக்குள்ளான மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.
மணிப்பூருக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சென்று ஆய்வு செய்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். வன்முறை நடந்து ஒரு மாதமாகியும் அங்கு இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை.
இதனால் மாநிலத்தின் பதட்டமான பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மாநிலத்தில் பல பெட்ரோல் பங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெட்ரோல் வாங்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். திறந்திருக்கும் ஒருசில பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்கள். அவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோல அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கடைகள் திறக்கப்படாததாலும், அங்கு போதுமான மருந்துகள் இல்லாததாலும் நோய் பாதித்த முதியவர்கள், குழந்தைகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலைகளில் சரக்கு லாரிகளை மறித்து போராட்டம் நடத்தியதால் மணிப்பூர் மாநிலத்திற்குள் பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு கிலோ சாதாரண ரக அரிசியின் விலை ரூ.30-ல் இருந்து ரூ.60 ஆக அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 70 ஆகவும், ஒரு முட்டை ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. இது ஏழை மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஒருபுறம் என்றால், மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. இதனால் அவசரத்திற்கு கூட பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
சில பகுதிகளில் தினமும் சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பணம் எடுக்க வேறு பகுதிகளுக்கோ, அல்லது பாங்கிகளுக்கோ செல்ல முடியாமல் மக்கள் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அதோடு பல இடங்களில் இணைய வழிச்சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இவற்றை சீரமைத்து அங்கு இயல்பு நிலை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரு சமூகத்தினருக்கிடையிலான மோதல் வன்முறையாக மாறியது
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மத்திய மற்று்ம மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது மெல்ல மெல்ல வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடந்த வாரம் அமித் ஷா மணிப்பூர் சென்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும். இல்லையெனில் தேடுதல் வேட்டை நடத்தி, ஆயுதம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செரோயு என்ற பகுதியில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கிளர்ச்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.
மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
- கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
- மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
இம்பால்:
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.
மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
- அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
புதுடெல்லி:
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டெல்லியில் உள்ள மத்திய மந்திரி அமித் ஷா வீட்டு முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண்கள் உள்ளிட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குகி இனமக்களை காப்பாற்றுங்கள் போன்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டம் காரணமாக அமித் ஷா வீட்டு முன்பு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மணிப்பூர் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலவரம் குறித்து விசாரிக்க மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இம்பால்:
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, மத்திய அரசு சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.
விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் இது குறித்து 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல் மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், கலவரம் பாதித்த மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கவர்னர் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
இதில் மாநில முதல் மந்திரி, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
- இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
- தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இைணயச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் இணையச் சேவைக்கான தடையை மேலும் நீட்டித்து மாநில அரசு 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தடையில் கைபேசி இணையச் சேவை மற்றும் அகண்ட அலைவரிசை இணையச் சேவை உள்ளடங்கியதாகும். அரசு பயன்பாட்டுக்கான இணையச் சேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- கொல்லப்பட்டவர்களில் சிலரின் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் பல தோட்டாக்கள் காயம் உள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குதி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமான வீடுகளும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. 40 ஆயிரம் பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அங்கு 4 நாட்கள் சென்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 6 வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவால் அமைக்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டனர்.
அப்படி இருந்தும் மணிப்பூரில் அமைதி நிலவாமல் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய், 9 வயது மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று முதல் மீண்டும் கலவரம் வெடித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இம்பால் கிழக்கு மற்றும் காங்போசி மாவட்டங்களுக்கு இடையே உள்ள காமன்லோக் பகுதியில் நேற்று இரவு 10 முதல் 10.30 மணி வரை கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. மேலும் ஆயுதங்களாலும் மோதிக் கொண்டனர்.
இந்த துப்பாக்கி சண்டை மற்றும் வன்முறையில் பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சிலரின் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் பல தோட்டாக்கள் காயம் உள்ளது.
மீண்டும் கலவரம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
- சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு 6 வழக்குகளை பதிவு செய்து கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இம்பால்:
பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் 3-ந் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டது.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.
மணிப்பூர் முழுவதும் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. ஒரு கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் சாம்பெல் பகுதியில் அமைந்துள்ள குகி சமூக பெண் மந்திரியான நேம்சா கிப்ஜெனின் வீட்டுக்கு மர்ம கும்பல் நேற்று இரவு தீ வைத்தனர்.
இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மணிப்பூர் மந்திரிகளில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி இவர் ஆவார்.
பெண் மந்திரியின் வீட்டுக்கு தீ வைத்த கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 110-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 310 பேர் காயம் அடைந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
வன்முறை சம்பவம் தொடர்பாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு 6 வழக்குகளை பதிவு செய்து கலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
- பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை பிரியங்கா காந்தி சாடினார்.
- மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
புதுடெல்லி:
மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்பத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மணிப்பூர் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
- மணிப்பூரில் ஒரு மாதத்துக்கு மேலாக கலவரம் நீண்டு வருகிறது.
- இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
புதுடெல்லி :
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒரு மாதத்துக்கு மேலாக கலவரம் நீண்டு வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ள இந்த வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.
இந்த கலவரம் தொடர்பாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பா.ஜனதாவின் வெறுப்பு அரசியல் மணிப்பூரை 40 நாட்களுக்கும் மேலாக எரித்து 100-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. பிரதமர் இந்தியாவை தோல்வியுறச் செய்து முற்றிலும் அமைதியாக இருக்கிறார்' என குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூரின் ஒவ்வொரு இதயத்திலும் இந்த வெறுப்பின் சந்தையை அடைத்து விட்டு, அன்பின் கடையை திறப்போம் என அவர் அழைப்பு விடுத்து உள்ளார். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அனைத்துக்கட்சிக்குழு ஒன்றை அங்கு அனுப்பி வைக்குமாறும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
- ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால் பாதுகாப்பு போலீசாரால் தடுக்க முடியவில்லை
- பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து இன்னும் ஓயாமல் நீடிக்கிறது. கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது வன்முறை ஓயவில்லை.
ஆயுதமேந்திய குழுக்கள் மீது கடும் நடவடிக்கை, 144 தடை உத்தரவு பிறப்பித்தும் அவ்வப்போது வன்முறை நடைபெறுகிறது. இம்பாலில் தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நேரத்திலும், நேற்று பெண் மந்திரி வீட்டுக்கு ஒரு கும்பல் தீவைத்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மத்திய மந்திரி ஆர்.கே. ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தீவைத்து கொளுத்தினர். சம்பவம் நடைபெற்றபோது மத்திய மந்திரி ரஞ்சன் அங்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடைபெற்றபோது மந்திரியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 9 பேர், ஐந்து பாதுகாப்பு வீரர்கள், 8 கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்களால் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
அனைத்து திசைகளிலும் இருந்து பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர் என வீரர்கள் தெரிவித்துள்ளனர். கும்பல் அதிகமாக இருந்ததால் எங்களால் தடுக்க முடியவில்லை. சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை எனவும் பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மந்திய மந்திரி ரஞ்சன் கூறுகையில் ''நேற்று இரவு நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் எனது வீட்டை எரித்துள்ளனர். தரைத்தளம் மற்றும் முதல் தளம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் எனது குடும்பத்தை சேர்ந்த எவரும் அந்த நேரத்தில் அங்கு இல்லை.
வன்முறை எதற்கும் தீர்வாகாது. இந்தச் செயலில் ஈடுபடுட்டவர்கள் மனிதகுலத்திற்கு எதிரிகள்'' என்றார்.
கடந்த மே மாதம் இதுபோன்று அவரது வீட்டை தாக்க கும்பல் முயன்றது. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாகும்.
- இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.
மும்பை :
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.
இதுவரை இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இம்பால் நகரில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலவர கும்பல் சூழ்ந்து தீ வைத்து எரித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதை மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலில் இந்துக்கள் இறந்துகொண்டு இருக்கும் வேளையில் இந்துத்வா என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் மணிப்பூரை சேர்ந்த இந்துக்கள் இந்துக்கள் இல்லையா?
ஒரே கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால் தான், ஆட்சி மற்றும் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பா.ஜனதா கூறி வருகிறது. மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.
அப்படியானால் மணிப்பூரில் ஏன் இந்த இரட்டை என்ஜின் அரசு தோல்வியடைந்தது?, மாநிலத்தில் அமைதியை இன்னும் நிலைநாட்ட முடியாததற்கு காரணம் என்ன? இந்த பயங்கரமான பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒருவார்த்தை கூட பேச மறுப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். குகி பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கிடைக்கிறது என்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.