என் மலர்
நீங்கள் தேடியது "சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி"
- 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
- சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.
நாகப்பட்டினம்:
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் நாகை வீர தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சார்பாக நாகை அடுத்த பாப்பா கோவில் தனியார் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாகை,வேலூர், திருச்சி,தஞ்சை, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். அப்போது அவர்கள் சிலம்ப கம்பில் எல்.இ.டி. விளக்கு பொருத்தி சிலம்பம் சுற்றினர்.
நாகை வீர தமிழன் சிலம்ப கலைக்கூடத்தின் ஆசான் சரவணன் கூறும்போது,போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கு பெற செய்ததற்கான முக்கிய காரணம் இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயம் போதையில்லா சமுதாயம் உருவாகிடவும், போதையினால் ஏற்படும் தீமைகளை மாணவர் பருவத்திலேயே அவர்களுக்கு விதைப்பதன் மூலம் அதன் தீமைகளை குறித்து அவர்கள் அறிந்து கொள்வதோடு சமுதாயத்திற்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கிங்காங் பங்கு பெற்று மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இடைவிடாமல் 3 மணி நேரம் நடைபெற்ற போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேர்ல்ட் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு அசோசியேஷன் செகரட்டரி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பதிவு செய்தார்.
- பலமாவட்டங்களிலிருந்து வருகை தந்து பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் 2.15 மணி நேரம் இடை நில்லாது மின்னொளி சிலம்பத்தை சுற்றி ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினர்.
- சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு ஆஸ்கர் புத்தக நிறுவனர் கதிரவன் சாதனைக்கான சான்றிதழ்க ளையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் பள்ளியில் ஆத்தூர் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சி அறக்கட்டளை மற்றும் மனோகரன் இலவச கல்வி மையம் சார்பாக "சாலை பாதுகாப்பை" வலியுறுத்தி, மாவட்டத்தில் முதல்முறை யாக மின்னொளி சிலம்ப உலக சாதனை விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் பெஞ்சமின் போஸ்கோ தலைமை வகி த்தார். ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடாசலம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் கண்ணன், விவசாய சங்க நிர்வாகி ஜேசுராஜ், சி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இச்சாதனை நிகழ்வில் மனோகரன் இலவச கல்வி அறக்கட்டளை நிர்வாகி சாந்தி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அதன் பின் தற்காப்பு கலைகளான குத்து ச்சண்டை, கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சி கலைநிகழ்வுகள் பயிற்சி மாணவர்களின் வாயிலாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. பலமாவட்டங்களிலிருந்து வருகை தந்து பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் 2.15 மணி நேரம் இடை நில்லாது மின்னொளி சிலம்பத்தை சுற்றி ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினர்.
இந்த சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு ஆஸ்கர் புத்தக நிறுவனர் கதிரவன் சாதனைக்கான சான்றிதழ்க ளையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆசான் கருணாகரனுக்கு கலை வித்தகர் விருதும், மற்ற ஆசான்களுக்கு நினைவு பரிசும் பதக்கமும் வழங்கப்பட்டது. திருக்குறள் ஒப்புவித்தும், உலகநாடு களின் தேசிய கொடிகளை பார்த்து அந்த நாட்டின் பெயரை சொல்லியபடி சிலம்பம் சுற்றிய அதிரதனுக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை செந்தில்குமார் செய்தி ருந்தார்.