search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறியீடுகள்"

    • திருச்சியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
    • இந்த சோதனையின் காரணமாக கடத்தல் தங்கம் வாங்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    திருச்சி

    தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் வரி ஏய்ப்பு செய்வதாகவும், சட்டத்துக்கு புறம்பாக கள்ள சந்தையில் தங்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் அமலாக்கத் துறையினருக்கு புகார்கள் சென்றன. அந்த வகையில் சென்னையில் 6 நகை கடைகளில் அமலாக்கத் துறையினர் 2 தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் உள்ள 4 கடைகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

    நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    திருச்சி ஜாபர் ஷா வீதியில் உள்ள 3 ஜுவல்லர்களிலும், பெரிய கடைவீதியில் உள்ள ஒரு ஜூவல்லரிலும் மற்றும் அதன் 3 உரிமையாளர்கள் வீடுகளிலும் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இதில் 2 கடைகளில் நடத்தப்பட்ட சோதனை நேற்று மதியம் 12 மணியளவில் நிறைவு பெற்றது. மற்ற கடைகளில் நடந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

    சென்னையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நகைக்கடைகளில் இருந்து திருச்சியில் உள்ள இந்த நகைக்கடைகள் தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளுக்கு கொடுத்து நகைகளாக விற்பனை செய்து வந்ததாக கூறப்பட்டது.

    இதில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள்,ரொக்க பணம் கைப்பற்றப்பட்டு

    ள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தங்கக் கட்டிகளை வாங்கி அதை நகைகளாக மாற்றி விற்பனை செய்த வகையில் சங்கேத மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் கட்டு கட்டாக சிக்கி உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட தங்கத்துக்கும் இருப்பில் இருந்த மற்றும் விற்பனை செய்யப்பட்ட தங்கத்துக்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த சோதனையின் காரணமாக கடத்தல் தங்கம் வாங்கும் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    • தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
    • கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தை பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கடந்த 3 மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புச்சாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் தமிழகத்திலேயே சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்த தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியி டப்பட்டு வருகிறது.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜூன் மாத தரவரிசை பட்டியலில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதே போல் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தையும், மகர்நோம்புசாவடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 38-வது இடத்தையும், சீனிவாச புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 39-வது இடத்தையும் பிடித்து தஞ்சை மாநகராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×