search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னை"

    • மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்
    • யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமயிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய பிரபல கேரள நடிகர் சுரேஷ் கோபி எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்ப்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று பாஜகவின் முதல் வெற்றியை கேரளாவில் பதிவு செய்தார். இந்த வெற்றியின் முக்கியத்துவம் கருதி எம்.பி சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் பதிவி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) கேரளாவில் செய்தியளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, மறைந்த காங்கிரஸ் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி இந்தியாவின் அன்னையாக விளங்குகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

     

    மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மீது இன்றளவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து சர்சையைக் கிளப்பி வரும் நிலையில் பாஜக சார்பில் அமைச்சராகியுள்ள சுரேஷ் கோபி இந்திரா காந்தியை இந்தியாவின் அன்னை என்று புகழ்ந்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.

    இந்நிலையில் தனது கருத்து குறித்து சுரேஷ் கோபி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில், இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்று நான் கூறியது எனது இதயபூர்வமான கருத்து. எனது மனதில் உள்ளதையே நான் பேசினேன். அதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

    யாரும் விரும்பினாலும் விருமாபாவிட்டாலும் இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்துக்கு பின் தனது இறுதி மூச்சுவரை இந்தியாவை கட்டியெழுப்பிய தலைவர் இந்திரா காந்தி. தேசத்துக்காக உழைத்த ஒரு தலைவரை அவர்  எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக மறுக்கவும் மறக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். 

     

    • இன்று இரவு தேர்பவனி நடக்கிறது
    • 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை (5-ந்தேதி) வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி 1-ம் திருநாள் முதல் தொடர்ந்து 8-ம் நாள் நேற்று வரை காலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை , 6.45 மணிக்கு கூட்டு திருப்பலியும், மறையுரையும், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் நாளான இன்று (4-ந்தேதி) காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடந்தது. இதில் கன்னியா குமரி காசா கிளாரட் அருட்பணி டன்ஸ்டன் தலைமை தாங்கி மறை உரையாற்றினார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர் நடை பெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட செயலர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்குகிறார். சென்னை சட்டப்பணி அருட்பணி எம்.சி.ராஜன் மறையுரையாற்று கிறார். இரவு 9 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி யும் நடைபெறுகிறது.

    10-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்ட திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட்வின் வின்சென்ட் மறை யுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், பங்குப்பேரவை யினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் ஒன்றான மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

    விழாவின் முதல் நாளான வருகிற 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    விழாவின் 15-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் மரிய டேவிட் தலை மை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 7 மணிக்கு இரையுமன் துறை பங்குத்தந்தை அருட்பணி சூசை ஆன்றனி தலைமை தாங்கி, மலையாள திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன் னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குத்தந்தை மகிமை நாதன், பங்கு இறைமக்கள், பங்குபேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ், ஜோண் ஆப் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ், பங்குபேரவை உறுப்பினர்கள், விழாக்குழு பொறுப்பாளர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×