என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதான பெண்மணி"

    • சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது.
    • அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம்அருகே உள்ள கொடுவாய் சக்தி விநாயகபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மனைவி முத்தம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று கொடுவாய் கடைவீதிக்கு வந்துள்ளார்.

    அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • மகாராஷ்டிராவில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மந்தமாக நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    காலை 9 மணி வரை 6.61 சதவீதம் வாக்குகளும் 11 மணி வரை 18.14 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில் மதியம் 1 மணி நேர நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில், 113 வயதான கஞ்சன்பென் பாட்ஷா என்ற பெண்மணி இந்த தேர்தலில் நேரில் வந்து வாக்களித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வாக்குப் பதிவு மையத்திற்கு வீல்சேரில் வந்த கஞ்சன்பென் பாட்ஷா உற்சாகத்துடன் தனது வாக்கை பதிவு செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவர் தவறாமல் வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் மிக வயதான மூதாட்டியாக அறியப்பட்டவர் டூமிகோ இடூகா.
    • ஜப்பானைச் சேர்ந்த இடூகா 116-வது வயதில் காலமானார்.

    டோக்கியோ:

    உலகின் வயதான பெண் என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அங்கீகரிக்கப்பட்டார்.

    இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டூமிகோ இடூகா தற்போது உயிரிழந்துள்ளார் என ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரியோசுகே வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகிலுள்ள அஷியாவில் இடூகா வசித்து வந்தார். அவருக்கு 4 வாரிசுகள் மற்றும் 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2019 முதல் நர்சிங் ஹோமில் தங்கி இருந்த அவர், கடந்த மாதம் 29-ம் தேதி மரணமடைந்தார்.

    ஆஷியாவிற்கு அருகிலுள்ள ஒசாகா வணிக மையத்தில், அமெரிக்காவில் போர்டு மாடல் டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் 1908, மே 23-ல் பிறந்தார்.

    உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் இடூகா வாழ்ந்தார். அதற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். தனது வயதான காலத்தில் வாழைப்பழங்கள், பால் போன்ற குளிர்பானமான கால்பிஸை ரசித்து குடித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×