search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கி போட்டிகள்"

    • போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம்.

    நெல்லை:

    ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது. போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் 2 நிலை களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. நுழைவு கட்டணம் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 99403 41508, 90430 36967 என்ற வாட்ஸ் அப்பில் 20-ந்தேதிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை நிர்வாகிகள் சேவியர், முருகேசன், பீர் அலி, டாக்டர் மாரிக்கண்ணன், ஜான்சன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • ஹாக்கி சாம்பியன் போட்டி வரும் 12.8.2023 வரை நடைபெற உள்ளது.
    • தருமபுரி டவுன் பஸ் ஸ்டேண்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தருமபுரி,

    7-வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி சாம்பியன் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 12.8.2023 வரை நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பினை தருமபுரி டவுன் பஸ் ஸ்டேண்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    உடன் தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, நகர மன்ற தலைவர் லட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் உள்ளனர்.

    ×