search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக நாடுகள்"

    • பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

     

    அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

     

    அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

     

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.
    • ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடது சாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். திருவனந்தபுரம், நெய்யாற்றின் கரை பகுதிகளில் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் மதச் சார்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இதனால் மக்களாட்சி கொண்ட மதச்சார்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் நற்பெயருக்கு உலக நாடுகள் மத்தியில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

    ஐ.நா. சபை, மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவுக்கு ஏற்பட்டதில்லை. இது மாற்றப்பட வேண்டும். அதற்கு பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்து அனைத்து மாநிலத்திலும் எழுந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சலீம் பாஷா தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஷேக் அப்துல் ரகுமான் வரவேற்புரை நிகழ்த்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஷபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லாப்பூதீன், வர்த்தக அணி தலைவர் ருமானா ஷாகுல், தொகுதி துணைத் தலைவர் இலியாஸ், துணை செயலாளர் அப்துல்லா, நகர செயலாளர் உசேன், பொருளாளர் அப்துல் ரஹீம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் உசேன், துணைத்தலைவர் பக்கரி முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபி மற்றும் மாவட்டச் செயலாளர் தர்பார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி நன்றி கூறினார்.

    • சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர்
    • வன்முறையால் முகாம்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என ஐ.நா. தகவல்

    மேற்கு ஆசியாவில் உள்ள நாடு லெபனான்.

    அங்கு 12-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய நாட்டு அகதிகளுக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் மிக பெரியது ஐன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) முகாம்.

    லெபனான் முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீனிய அகதிகளில் சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர். இதில் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மட்டுமே சுமார் 63 ஆயிரம் பேர் இருப்பார்கள் என ஐ.நா. கூறுகிறது.

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள சிடான் நகரத்திற்கருகே இந்த முகாம் உள்ளது. இப்பகுதி லெபனான் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால், அங்குள்ள முகாம்வாசிகளின் பாதுகாப்பை அவர்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். அங்கு அடிக்கடி மோதல்கள் நடைபெறும்.

    கடந்த ஜூலை 29 முதல் இங்கு இருதரப்பினரிடையே மோதல்கள் தொடங்கியது. இதில், இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடையலாம் என்பதால் சில உலக நாடுகள் தங்கள் நாட்டினர் லெபனானுக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன.

    சவுதி அரேபியா நேற்று லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அங்கிருந்து வெளியேறும் வரை ஆயுத மோதல்கள் நடக்கும் பகுதிகளை நெருங்குவதைத் தவிர்க்கவும் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

    லெபனானில் உள்ள சவுதி தூதரகம் ஒரு அறிக்கையில், லெபனான் நாட்டிற்கு பயணத்தடையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருந்தாலும் எந்தெந்த பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.

    இதேபோல் குவைத், லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கு கவனமுடன் இருக்குமாறும், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவித்திருக்கிறது. ஆனால், தற்போதுவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடவில்லை.

    பிரிட்டன், தன் நாட்டிலிருந்து லெபனானுக்கு செல்ல விரும்புவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் லெபனானின் தெற்கின் சில பகுதியான ஐன் எல்-ஹில்வே முகாமுக்கு அருகில் "அத்தியாவசிய பயணம் மட்டுமே" மேற்கொள்ளுமாறும், பிற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    "இந்த சண்டை தொடரக்கூடாது. இதனால் ஏற்படும் விளைவுகள் முகாமில் வசிப்பவர்களுக்கும், பாலஸ்தீனிய மக்களுக்கும், அனைவருக்கும் மோசமானதாக இருக்கும். மோதலை நிறுத்துங்கள். மோதலை நிறுத்த யாராவது அழுத்தம் கொடுக்க முடியும் என்றால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்" என லெபனான் நாட்டின் ஷியா பிரிவு அரசியல் கட்சியாகவும், ராணுவ குழுவாகவும் திகழும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் அசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    அங்குள்ள முகாம்களில் நடைபெறும் வன்முறையால் அவற்றில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என 4 நாட்களுக்கு முன் ஐ.நா. தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×