என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாப்பாடு"
- அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
- குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.
பல நாடுகளில் பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப் பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
உணவு உண்ணுதல் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கான ஒரு மிக முக்கியமான வாழ்க்கை நடவடிக்கை. அதேசமயம், அது ஒரு சமூக நிலையில் ஏற்கப்படக்கூடிய முறைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
பல நபர்கள், எத்தனை வயதாகியும், சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய முறையில், உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றக்கூடிய நிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் முறை பார்க்கும் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.
எனவே, இளமையில் கல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே, நாகரீகமான முறையில் உணவு உண்ணுதல் எப்படி என்பதை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.
சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.
மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை ஏற்படுகிறது. இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.
உணவை வாயில் வைத்தப் பின்னர், அதை மூடிய நிலையில் மெல்லுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் சவக் சவக் என்ற அநாகரீகமான சத்தம் வராது.
உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.
டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, உங்களின் குழந்தை தேவையற்ற இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப் பழகும்.
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ உண்பதற்கு, எந்த சூழலிலும் உங்களின் குழந்தையை அனுமதிக்க வேண்டாம்.
குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.
டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.
சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. மேலும், அதேசமயத்தில், அவர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.
எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை உங்களின் குழந்தை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்கும் அடிப்படை.
- முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
- உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.
இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓட்டலில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.
- ராஜேந்திரன் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை ஜே.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த அண்ணன்-தம்பியான தினேஷ், அஜித் ஆகியோர் சாப்பிட்டனர். பின்னர் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். இதனை ராஜேந்திரன் கண்டித்தார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தினேசும், அஜித்தும் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் கூட்டாளிகளுடன் வந்த அவர்கள் ஓட்டலுக்குள் புகுந்து உருட்டு கட்டையால் அங்கிருந்த ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர். ஓட்டலில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.
இதனை கண்டு ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதல் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதுகுறித்து ராஜேந்திரன் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து தினேஷ், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்