என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்ரித் பாரத்"

    • பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • தென்காசி ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

    தென்காசி:

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே அமைச்சகம் ரூ.24,470 கோடிக்கு மேல் ஒதுக்கியது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    தமிழகத்தில் தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி ரெயில் நிலையத்தின் அபிவிருத்தி ரூ.7.08 கோடியில் நடைபெறுகிறது. அதாவது ரெயில்

    நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், அந்த நுழை வாயிலில் புதிய நிலையக் கட்டிடத்தை நிர்மாணித்தல், அணுகு சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.

    விழாவில் தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர், அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன்,

    கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, தென்காசி பா.ஜனதா மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

    சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

    நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகும்.

    அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

    ×