என் மலர்
நீங்கள் தேடியது "இடிக்கும் பணி"
- புதிய பஸ் நிலைய பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
- ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தை நவீனமாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த பஸ் நிலையத்திற்கு மாற்றாக ராமநாதபுரம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள சந்தைதிடல் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய நவீன பஸ் நிலைய வரைபடம் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. புதிய பஸ் நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்வதோடு, 92 கடைகள், வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.
மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள், 16 கழிப்பறைகள், பேவர் பிளாக் நடைபாதை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த பணிக்கான பூமிபூஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிங்களை ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது.
- நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 30 படுக்கைகள், அறுவை சிகிச்சை மையத்துடன் செயல்பட்டு வந்த 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது. இது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதன் அருகில் தற்போது வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோா் காத்திருக்கும் சமயத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சிதிலமடைந்த கட்டடத்தை இடித்து தருமாறு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சுகாதார நிலையம் சாா்பில் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.
இது குறித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன் உத்தரவின்பேரில்,பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) உதவிப் பொறியாளா் ராமராஜ் ஆய்வு செய்து அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளாா்.