search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்வர் யாத்திரை"

    • கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார்,கவுமுக், கங்கோத்திரி உள்ளிட்ட புனிதத்தலங்களுக்கு சிவனின் பக்தர்கள் பயணம் சென்று கங்கை நீரை எடுத்துவரும் இந்து மத யாத்திரை கன்வர் யாத்திரை என்று அழகைக்கப்படுகிறது. உத்தரபிரதேசம் வழியாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 6 தேதி முடிவடைகிறது.

    முன்னதாக உ.பியில் கன்வர் யாத்திரை நடக்கும் வழியில் உள்ள உணவகங்களின் முன் உரிமையாளர்கள் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது. இது இஸ்லாமிய கடை உரிமையாளர்களை பாதிக்கும் விதமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் கடைகளில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது, அமைதியை உறுதிசெய்யவே என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி அரசு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி உ.பி மாநிலம் முஜாபர்நகரில் உள்ள சாலையில் தங்களை பார்த்து ஹாரன் அடித்ததாகவும் மோத முயன்றதாகவும் கூறி இஸ்லாமிய நபர் சென்ற காரை அடித்து உடைத்து அவரை தாக்கும்  வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 15 கன்வர் யாத்ரீகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இந்நிலையில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கன்வார் யாத்ரீகர்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    உ.பியின் மீனாக்ஷி சவுக் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி முகாமிட்டிருந்த அந்த பக்தர்கள், அவ்வழியாக சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட நபரை மக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தி அதை படம் பிடித்தும் உள்ளனர். தாக்கப்பட்ட நபர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உ.பி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவருவது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏறபடுத்தியுள்ளது.

    • அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
    • உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதற்கிடையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.

    பெயர் பலகையில் உரிமையாளர் பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்ட அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்தது.

    உ.பி., உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உத்தரப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தங்களது உத்தரவை நியாயப்படுத்தி பேசியுள்ளது.

    இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பேசுகையில், அரசின் இந்த உத்தரவு அமைதியை உறுதிசெயவும், யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே ஆகும். தவறுதலாகக் கூட கன்வர் யாத்ரீகர்களின் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காவதும், முந்தைய காலங்களில் நடந்த சில அசௌகரியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கன்வர் பயணம் மேற்கொள்ளும் பல யாத்திரீகள், கடைகள் மற்றும் உணவாகங்களின் பெயர்கள் தங்களைக் குழப்புவதாக அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்த புகார்களுக்கு உரிய நடவைடிக்கை எடுக்கும் பொருட்டே இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததாக தனது வாதத்தை முன்வைத்தார்.

    மேலும் உணவகங்களில் அசைவம் சமைக்கக்கூடாது என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பெயரை கடை முன்னாள் எழுத வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

    • கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது.

    கன்வர் யாத்திரை என்பது வட மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்றதாகும். தென்னிந்தியாவில் முருகப் பெருமானுக்கு காவடி சுமந்து, பாத யாத்திரையாக பல கி.மீ., தூரம் நடந்தே வருவது போல், வடக்கில் சிவபெருமானுக்காக பாதயாத்திரை மேற்கொள்வதாகும். இதை இந்துக்களின் தவக்காலம் என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த ஆண்டு கன்வர் யாத்திரை செல்வதற்கு ஏராளமான பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

    கன்வர் யாத்திரை மேற்கொள்பவர்களை கன்வரியார்கள் என அழைப்பதுண்டு. வெகு தொலைவில் இருந்து பாத யாத்திரையாக வரும் இவர்கள் கங்கையில் புனித நீரை சேகரித்து, தோளில் சுமந்து சென்று பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் செய்வார்கள்.

    இதற்காக ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து, இவர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இந்த கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி துவங்கி, ஆகஸ்ட் 2-ந்தேதி சிவராத்திரி நாளில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கன்வர் யாத்திரை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தரகாண்ட் டிஜிபி அபினவ் குமார் கூறுகையில்,

    கன்வர் மேளா யாத்திரையின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் மக்களின் மத நம்பிக்கை ஆகியவற்றின் பார்வையில் உத்தரகாண்ட் காவல்துறைக்கு ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.

    இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜூலை 1-ந்தேதி 8 மாநில காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் மத்திய ஏஜென்சிகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (CAPF) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    இந்த முறை கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலை தடுக்க கண்காணிப்பு நோக்கங்களுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்த உள்ளோம்.

    கடந்த காலங்களில் கன்வர் மேளாவை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைத்து வரும் ஒத்துழைப்பு, ஆதரவு கொண்டு இதை வெற்றிகரமாக முடிப்போம் என்பதில் உறுதியாக உள்ளோம். யாத்ரா நல்லபடியாக நடக்கும் என்று கூறினார்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.
    • போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள்.

    போபால்:

    வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.

    மத்தியபிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று இரவு கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் தாசில்தார் வாகனத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள். இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×