search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட் கட்சியினர்"

    • 49 பெண்கள் உட்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியக்குடியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த 14-ந் தேதி இந்திய மாதர் சங்க சம்மேளனம் சார்பில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் அப்பகுதி பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 49 பெண்கள் உட்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் செந்தில் குமார், மாநிலத் துணைச் செயலாளர் தில்லைவனம், மாதர் சங்க தலைவி தாமரைச்செல்வி அக்கட்சியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் அம்மாபேட்டை நால்ரோடு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏடிஎஸ்பி முத்தமிழ்செல்வன் தலைமையில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
    • ரெயில்வே பீடர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள சொக்கர் கோவில் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பது போல் நடித்துக் காண்பித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம் பகுதியில் உள்ள மோசமாக உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை பாதாள சாக்கடை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீர் அமைத்திட வேண்டும். காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ராஜபாளையம் ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் ரயில்வே பீட்டர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ×