search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிவேந்தன்"

    • பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுகிறார்கள்- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
    • யானை வழித்தடங்களை பற்றி இன்னும் முழு அறிவு யாருக்கும் கிடையாது.- அமைச்சர் மதிவேந்தன்

    தமிழக சட்டசபையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் ஈஷா தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது சக அமைச்சரையே லேசாக கடிந்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. கோவையில் ஈஷா யோகா மையத்திற்கான இடமானது யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா? என்ற கேள்வியால் இந்த சம்பவம் நடைபெற்றது.

    இன்றைய சட்டமன்ற நிகழ்வின்போது,

    காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானா "யானை வழித்தடங்களை பற்றி வனத்துறை அமைச்சர் பேசினார். பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுகிறார்கள். யானைகள் கடந்து செல்லும் இடம் (Elephant Crossing) போடுவதில்லை. கோவை ஈஷா யோகாவில் யானை வழித்தடங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.

    அப்போது அமைச்சர் மதிவேந்தன் "யானை வழித்தடங்களை பற்றி இன்னும் முழு அறிவு யாருக்கும் கிடையாது. குறைந்த அறிவுதான் இருக்கிறது. இதெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மானியத்தில் பேசுகிறேன். இதற்காக முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, யானைகள் தொடர்பான நிபுணர்களை (Elephant experts) வைத்து தீவிரமாக ஆய்வு பண்ணதுக்கு அப்புறம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும். அதனால் அவசரப்பட்டு எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டாம்"

    அப்போது அவை முன்னவரான துரைமுருகன் திடீரென எழுந்து சபாநாயகர் அனுமதியுடன் "யானைகள் வழித்தடத்தை பற்றி சொன்னீர்கள். ஆனால் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இடங்களை எல்லாம் தானாக பிடித்து கொண்டு கட்டடம் கட்டி கொண்டு யானைகள் வழித்தடத்தை தடுத்திருக்கிறார்கள். ஈஷாவில் உங்களின் அனுமதியை பெற்றுதான் கட்டடங்கள் கட்டினார்களா? யானைகள் வழித்தடத்தை பிடித்து கொண்டது உண்மையா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கை வைத்திருக்கிறார்களா, இல்லையா?" அதற்கு நேரடியாக பதில் கேட்கிறார் என்றார்.

    அதற்கு அமைச்சர் மதிவேந்தன் "அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார். யானைகள் வழித்தடங்களை பற்றி தெளிவுபடுத்துவதற்கு தான் இந்த முயற்சி. ஈஷா விவகாரத்தில் என்னென்ன விவரங்கள் என்று தெரிந்து கொண்டுதான் சொல்ல முடியும். அதை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் சொல்கிறேன்" என்றார்.

    இந்த விவாதத்தை பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருந்து என்று கூறப்பட்டாலும் சக அமைச்சரை கடிந்து கொண்டார் என பேசப்படுகிறது.

    • வனப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தான முன்னேற்ற அறிக்கையின் விவரத்தினை விளக்கி கூறினார்கள்.
    • ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுதாநாஷீ குப்தா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் வனப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் கிண்டி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையின் உயர் அலுவலர்கள் தங்களது துறையில் வனப் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தான முன்னேற்ற அறிக்கையின் விவரத்தினை விளக்கி கூறினார்கள்.

    அதனைக் கேட்டறிந்த அமைச்சர் மதிவேந்தன், முதலமைச்சரின் முகவரி சார்ந்த மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி விரைவில் தீர்வு காண தேவையான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மானியக் கோரிக்கை அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வனத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுப்ரத் முஹபத்ரா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாச ரெட்டி மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சுதாநாஷீ குப்தா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
    • பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்கும்போது உடனடியாக தீா்வு காணப்படும் என தெரிவித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் வனத்துறை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வன அலுவலா்கள் மற்றும் பழங்குடியினா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    வனப்பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு, மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் வனத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    வனத்துறை பணி என்பது வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் ஆத்மாா்த்தமான பணியாகும்.

    அடிப்படை வசதிகள் வேண்டி வரும் பொதுமக்களிடம் வனத் துறை சாா்ந்ததா அல்லது பிற துறைகளைச் சாா்ந்த பிரச்னையா என வனத்துறை அலுவலா்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

    பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்கும்போது உடனடியாக தீா்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், முதன்மை தலைமை வனப்பாது காவலா் சுப்ரத் மஹாபத்ரா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா்கள் கவுதம், கொம்மு ஓம்காரம், துணை இயக்குநா்கள் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யா, அருண்கு மாா், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக பொது மேலாளா் அசோக்குமாா், தலைமை உதவி வனப் பாதுகாவலா் தேவராஜ், ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா் ஆல்வாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    ×