என் மலர்
நீங்கள் தேடியது "மண் சோறு"
- குழந்தை வரம் கேட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
- இரவு சாமி வீதி உலா நடந்தது
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று நடைபெறும்.
குழந்தை இல் லாத பெண்கள் இதில் பங் கேற்று வழிபட்டு கோவிலில் வழங்கும் பிரசாதத்தை முழங்காலிட்டு கைகளை பின்புற மாக கட்டியவாறு மண்சோறு சாப்பிடுவர்.
இந்த ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பரதேசி ஆறுமுக சாமி சமாதிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் ஆகியவை அபிஷேகம் செய்யப்பட்டது.
குழந்தை வரம் கேட்டு வழி பட வந்த 1,200 பெண்கள் கோவில் முன்பு அமர வைக்கப்பட்டனர். அதில் பெரிய மேடை அமைத்து பல்வேறு யாகங்கள் நடந்தது.
பின்னர் குழந்தை வரம் கேட்டு வழிபட்ட பெண்க ளுக்கு பிரசாதம் தயார் செய்து குருபூஜை செய்து பல் வேறு பகுதியில் உள்ள சாதுக் கள் மூலம் வழங்கப்பட்டது.
அதனை முந்தானையில் வாங்கிய பெண்கள் கோவில் முன்பு உள்ள குளத்தில் படிக் கட்டில் முழங்காலிட்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டனர். வள்ளி, தெய்வானை முருகனுக்கு அலங்காரம் செய்து வைத்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள் எடைக்கு எடை காசுகளை வைத்து துலாபாரத்தில் காணிக்கை செலுத்தினர். இரவு சாமி வீதி உலா வந்தது.
- பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது.
- பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.