என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரம் லேண்டர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது.
    • விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும்.

    சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று மதியம் இஸ்ரோ வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

    தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும்.

    இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

    விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். இதை "7 மினிட்ஸ் ஆப் டெரர்" என்று அழைக்கிறார்கள். ஏன் என்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். அந்த சமயத்தில் லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும். அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
    • சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது.

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது. இன்று மாலை 06:04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அதன்படி விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகள் துவங்கின.

    • நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியது.
    • சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது.

    2003, ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்தியாவின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்கலங்களை அனுப்பி, நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான் எனும் பெயரில் ஒரு திட்டம் குறித்து அறிவித்தார்.

    இத்திட்டத்தை தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மொடியும் தொடர்ந்து ஊக்குவித்ததை தொடர்ந்து இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

     

    சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் எனும் லேண்டர், பிரக்யான் எனும் ரோவர் உள்ளது. இன்று மாலை 06:04 மணிக்கு நிலவின் தென் துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

    இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். முன்னதாக லேண்டரை தரையிறக்குவதற்கான சிஸ்டம்களை அடிக்கடி சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சரியாக 5.44 மணிக்கு, விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி தொடங்கியது.

    அப்போது விக்ரம் லேண்டர் மணிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. லேண்டரை தரையிறக்கும் போது, நிலவின் ஈர்ப்புவிசை மிக முக்கிய பங்கு வகித்ததால், அதற்கு ஏற்ற வகையில், லேண்டரின் வேகத்தை கட்டுத்தப்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

    இதுவரை நிலவில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இது வரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

    • இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
    • இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

    இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.


    இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம்.
    • இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம்.

    இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது.

    நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதை அடுத்து, இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை பாராட்டி இந்திய பிரதமர் மோடி, "வரலாற்று சிறப்புமிக்க மகத்தான தருணம் இது. இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும் நேரம். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    • இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
    • விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல் எட்டி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.

    இதனை கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சந்திரயான் 3 வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் மற்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்திரயான் 3 வெற்றிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால்பதித்து வரலாற்று சாதனை படைத்தது.
    • நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து இந்தியாவுக்கு உலக முழுவதிலும் இருந்து வாழ்த்து.

    விண்வெளி ஆராய்ச்சி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. 60-களில் விண்வெளி துறையில், இந்தியாவை பார்த்து உலக நாடுகள் சிரித்த நிலையில், இன்று இஸ்ரோவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. விண்வெளியில் பல்வேறு அசாத்திய திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்து இஸ்ரோ, உலக நாடுகளை தன் பக்கம் திரும்ப பார்க்க செய்திருக்கிறது.

    அந்த வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை செய்துகாட்டி இருக்கிறது. இந்த திட்டங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

     

    சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை

    சந்திராயன் 2 - வனிதா முத்தையா

    சந்திராயன் 3 - வீரமுத்துவேல்

    மங்கள்யான் - சுப்பையா அருணன்

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு திட்டங்களும், இஸ்ரோ வரலாற்றில் சிறப்புவாய்ந்தவை ஆகும். இவை அனைத்திலும் இயக்குனர்களாக இருந்த அனைவரும் தமிழர்கள் ஆவர். இதைவிட முதன்மையானது, இவர்கள் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.
    • விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் சரித்திர சாதனை படைத்துள்ளது.

    சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. இந்த 'லேண்டர்', நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர்.

    இறுதியில் இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 - விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி இன்று மாலை 06:04 மணிக்கு துல்லியமாக தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள மக்கள், மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நேரலை காட்சியை இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் டோனி பார்வையிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஜிம்மில் இருந்த டிவியில் இந்த வீடியோ காட்சியை பார்த்து கைகளை தட்டி அவரது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

    இவர் மட்டுமல்லாமல் அவரது மகளாக ஷிவாவும் இந்த காட்சியை பார்த்து துல்லி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

    • நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
    • விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

     

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ. (ILSA) கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரவித்து இருக்கிறது. நிலவில் ஏற்பட்ட அதிர்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்து உள்ளது. ஐ.எல்.எஸ்.ஏ. கருவியானது பெங்களூருவில் டிசைன் செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புகைப்படம் ‘எக்ஸ்’ தளத்தில் வைரலாகி வருகிறது.
    • சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

    சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை ஒரு சிறுவன் பரிசளித்துள்ளான்.

    இதுகுறித்த புகைப்படம் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது. சந்திரயான்-3 பயணத்தின் போது சந்திரனுக்கு எடுத்து செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் மாதிரியை அந்த சிறுவன் மிக நுணுக்கமாக வடிவமைத்து சோம்நாத்திடம் வழங்கி உள்ளான். சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விண்வெளி ஆய்வில் ஏற்படுத்தி ஆழமான தாக்கத்துக்கு இது ஒரு சான்றாக இருப்பதாக பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே எழும்பியது
    • செப்டம்பர் 22 அன்று மீண்டும் விழிப்பு நிலைக்கு கொண்டு வரப்படும்

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து நிலவை அடைந்து, தங்கள் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து இஸ்ரோ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. அதில், "விக்ரம் லேண்டர் திட்டமிட்ட குறிக்கோளை தாண்டியே சிறப்பாக செயல்பட்டது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளை இட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது."

    "இன்று 08:00 மணிக்கு விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு செல்லுமாறு செயலாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அதனுள்ளேயே சில பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமிக்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன."

    "ஆனால், அதில் உள்ள சமிக்ஞைகளை கிரகிக்கும் 'ரிசீவர்' கருவி அணைக்கப்படவில்லை. சூரிய ஒளியிலிருந்து பெறும் சக்தி நின்றவுடன் பிரக்யானுக்கு அருகில் லேண்டர் உறக்க நிலைக்கு சென்று விடும். செப்டம்பர் 22 அன்று பிரக்யானும், விக்ரமும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்," என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    லேண்டர் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே கிளம்பியது உட்பட அதன் சமீபத்திய செயல்கள் குறித்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

    • பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.
    • சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்தது.

    கோவை:

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

    14 நாட்கள் நீடிக்கும் நிலவு இரவில், சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே, நிலவில் நேற்று சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரக்யானைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரைப் பொறுத்தவரை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

    ×