என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை 2023"

    • உலகக் கோப்பை 2023 தொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.
    • உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டன.

    உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானி்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன.

    ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் எப்போது நடைபெறும் என்ற விவரங்களை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

     

    அதன்படி, செப்டம்பர் 29-ந்தேதி மட்டும் மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதே நாளில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. செப்டம்பர் 30-ந்தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    அக்டோபர் 2-ந்தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம், நயூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. அக்டோபர் 3-ந்தேதி நடைபெறும் மூன்று ஆட்டங்களில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை, இந்தியா மற்றும் நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.

    உலகக் கோப்பை 2023 தொடருக்கான டிக்கெட்களை இந்திய ரசிகர்கள் புக்மைஷோ தளத்தில் வாங்கிட முடியும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. உலகக் கோப்பை 2023 தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பத்து பயிற்சி ஆட்டங்களும் அடங்கும்.

    டிக்கெட் விற்பனை நாளை (ஆகஸ்ட் 24) துவங்கி, செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடரின் ஒவ்வொரு கட்டம் மற்றும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் பலக்கட்டங்களாக விற்பனை செய்யப்பட உள்ளன. 

    • உலகக் கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    • சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரையும் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யவில்லை.

    உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானி்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன. ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரையும் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யவில்லை. அவர்களை ஆசிய கோப்பை 2023 இந்திய அணியில் தேர்வு செய்தார். இத்துடன் காயத்தால் அவதிப்பட்டு, அதில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்துள்ளார்.

    ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, சமி, சிராஜ், தாகூர் இடம் பெற்றனர்.

    இந்தியா தனது உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் விளையாடுகிறது.

    • ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம்.
    • ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 5-ந் தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி முடிகிறது. இதற்காக அனைத்து அணியினரும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய அணி 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் காரணம் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டாப் ஆர்டர்தான் இந்திய அணியின் பெரிய பலம். ஆனால் நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கின்றது. நான் இதுவரை பார்த்த வரையில் பெரிய போட்டிகள், முக்கியமான போட்டிகளில், அல்லது ஐசிசி தொடர்களில் இந்தியாவின் டாப் ஆர்டர்தான் சொதப்புகின்றனர்.

    எனவே அதுதான் இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எனவே வரவிருக்கும் ஆசியக்கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். ரெகுலராக இவர்கள் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும். குறிப்பாக பெரிய போட்டிகளில் இவர்கள்தான் ஆட வேண்டும்.

    ஆகவே ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இவர்களிடத்தில் ஏகப்பட்ட அனுபவம் உள்ளது. ஷுப்மன் கில்லை அனைத்து வடிவ வீரர் ஆக்கியுள்ளோம். அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க இதுதான் சிறந்த வாய்ப்பு எனவே அவரும் கிடைத்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

    கில் மிக முக்கியமான வீரர். ஏனெனில் ரோகித் சர்மா தொடக்கத்தில் மெதுவாகவே ஆடுவார். பிறகுதான் விளாசத்தொடங்குவார். அந்தத் தருணங்களில் சுப்மன் கில்தான் ரன் ரேட்டைத் தக்கவைக்க வேண்டும். சில வேளைகளில் ரோகித் சர்மா தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறார். இது ரிஸ்கான விஷயம்.

    ஆனால் ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆகவே ஷுப்மன் கில் மீது அதிக சுமை உள்ளது. அவர் ஆடும் விதம் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு இது முக்கியமான தொடர்களாகும்.

    இவ்வாறு சபா கரீம் கூறுகிறார். 

    • உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
    • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8-ம் தேதி விளையாடுகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

    2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி, நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னணி வீரர்களும் தங்களின் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.  

    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.
    • தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

    உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த அணியில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.

    தமிழக வீரர் அஸ்வின் மற்றும் தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உள்ளூரில் உலகக்கோப்பை நடப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கோப்பையை நாம் அனைவரும் வீட்டிற்கு கொண்டு வருவோம் என கூறினார்.

    • 2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது.
    • உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிக்கான அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனையில் நான்கு லட்சம் டிக்கெட்கள் விற்பனைக்கு திறக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதை பி.சி.சி.ஐ. உணர்ந்து கொண்டுள்ளது.

    மாநில கூட்டமைப்புகளுடன் ஆலோசனைகளை முடித்த பிறகு, சுமார் நான்கு லட்சம் டிக்கெட்களை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் முடிந்தவரை அதிக ரசிகர்களுக்கு டிக்கெட்களை விற்பனை செய்யவும், அவர்களை முடிந்தவரை வரலாற்று சிறப்புமிக்க தொடரில் கலந்து கொள்ள செய்ய முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான போட்டிகளுக்கு பொது பிரிவு டிக்கெட் விற்பனை செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. ரசிகர்கள் https://tickets.cricketworldcup.com. வலைதளத்தில் வாங்கிட முடியும். அடுத்தக்கட்ட டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் இதே போன்று குறுகிய காலக்கட்டத்தில் அறிவிக்கப்படும்.

    2023 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • முக்கிய போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்ததாக ரசிகர்கள் ஆதங்கம்
    • அனைத்து போட்டிகளுக்குமான பொது டிக்கெட் விற்பனை என பிசிசிஐ தகவல்

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது.

    டிக்கெட் விற்பனை தொடங்கியதும் பெரும்பாலான போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன. பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஆன்லைன் விற்பனை இணைய தளம் மீது குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் அனைத்து போட்டிக்கான 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

    இன்று முதல் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

    அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பேரார்வம், பங்களிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஐந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. அதேபோல் பெங்களூரு, டெல்லியில் நடைபெறும்  போட்டிகளுக்கான விக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

    • விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
    • இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது.
    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டி வங்காளதேசம் அணியுடன் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

    2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது. இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணியினருக்கு பட்டாடை அணிவித்து பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளன.

    ஆப்கானிஸ்கான் அணி உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தர்மசாலாவில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இது உலகக் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி ஆகும்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா சாஹிதி கேப்டனாக இருக்கிறார். இவர் தவிர ரஹமனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சாட்ரான், ரியாஸ் ஹாசன், ரகமது ஷா, நஜிபுல்லா சட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகிள், அசமதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரகுமான் மற்றும் நவீன் உல் ஹக் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

    • கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோவில் புதிய விளக்கம்.
    • உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரல் ஆனதோடு, பரபரப்பையும் கிளப்பியது. வீடியோவில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், கடத்தப்படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோ அமைந்து உள்ளது. அதன்படி கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட வீடியோ ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விளம்பரம் என்று தெரியவந்துள்ளது.

    எவ்வித தகவலும் வழங்காமல், கவுதம் கம்பீர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது விளம்பரம் என்று தெரியவந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நாடு முழுக்க போட்டிகளை நடத்த பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    • உலகக் கோப்பை 2023 தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
    • உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருப்பதை அடுத்து, ஒவ்வொரு அணியும் அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியும் களம் காண்கிறது. இதற்காக நெதர்லாந்து அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு வலை பயிற்சியில் ஈடுபட்ட நெதர்லாந்து வீரர் பால் வான் மீக்கெரென், பயிற்சிக்கு பிறகு நெட்சில் பந்து வீசிய இளம் வீரருக்கு தனது காலணிகளை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகல்.
    • ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் களமிறங்கி இருக்கிறார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பலர் ஏமாற்றம் தெரிவித்து இருந்தனர்.

    தற்போது இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    2011, 2015 என இரு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் விளையாடி இருக்கும் நிலையில், தற்போது 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம், மூன்றாவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் விளையாட இருக்கிறார்.

    ×