search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரக்யான் ரோவர்"

    • பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
    • பிரக்யான் ரோவரின் கேமராக்கள் பள்ளத்தை படம் பிடித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் சந்திராயன்-3 விஷன் 2023 சந்திரனில் அதன் வெற்றிக்கரமான பணியை முடிவு செய்த பிறகும் புதிய கண்டு பிடிப்புகளை செய்து வருகிறது.

    நிலவின் தென்துருவ பகுதியில் பிரக்யான் ரோவர் தனது தரையிறங்கும் இடத்திற்கு அருகில் 160 கி.மீ. அகலத்தில் பெரிய பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது. இதனை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சமீபத்தில் அறிவியல் நேரடி இதழிலும் இது வெளியிடப்பட்டுள்ளது.

    பிரக்யான் ரோவர் அதன் தரையிறங்கும் தளத்தில் தென்துருவ-எய்ட்கன் படுகையில் இருந்து சுமார் 350 கி.மீ. தூரத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான படுகையை கடந்து சென்ற போது இந்த பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது.


    இந்த பள்ளம் தென் துருவ-எய்ட்கன் படுகையை உருவாக்குவதற்கு முன்பே உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பள்ளம் குப்பைகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது சிதைந்த நிலையில் உள்ளது. பிரக்யான் ரோவரின் உயர் திறன் கொண்ட கேமராக்கள் இந்த பள்ளத்தை படம் பிடித்துள்ளது.

    இதன் மூலம் விஞ்ஞானிகள் சந்திரனில் புதைக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்வதற்கான அரிய வாய்ப்பை பிரக்யான் ரோவர் வழங்கியுள்ளது. பிரக்யான் ரோவரின் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்த பள்ளத்தில் இருந்து சேகரிக்கும் பழங்கால தகவல்கள் சந்திரனின் ஆரம்ப கால வரலாறு மற்றும் அதன் தனித்துவமான உருவாக்கம் பற்றி இருந்த நமது புரிதலை மாற்றியமைக்க முடியும்.


    இந்த படங்கள் நிலவின் புவியியல் பரிமானத்தை பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. காலப்போக்கில் தொடர்ச்சியான பேரழிவு தாக்கங்களால் மேற்பரப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    பள்ளம் கண்டுபிடிக்கப்பட்ட தென் துருவ-எய்ட்கன் படுகை கிட்டத்தட்ட 1400 மீட்டர் தாக்க குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை ஆய்வு செய்வதன் மூலம் சந்திரனின் ஆரம்ப கட்டம் அதன் செயல்முறைகளை பற்றி விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள உதவும்.

    இது எதிர்காலத்தில் சந்திர பயணம் மற்றும் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு பல முக்கிய தகவல்களை தரலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    • நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே எழும்பியது
    • செப்டம்பர் 22 அன்று மீண்டும் விழிப்பு நிலைக்கு கொண்டு வரப்படும்

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஜூலை மாதம் 14 அன்று, நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரயான்-3, வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் எனும் லேண்டர் சாதனமும், பிரக்யான் எனும் ரோவர் சாதனமும் பிரிந்து நிலவை அடைந்து, தங்கள் ஆய்வு பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சாதனம் குறித்து இஸ்ரோ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. அதில், "விக்ரம் லேண்டர் திட்டமிட்ட குறிக்கோளை தாண்டியே சிறப்பாக செயல்பட்டது. அது வெற்றிகரமாக ஒரு "ஹாப்" பரிசோதனையையும் நிறைவு செய்தது. கட்டளை இட்டதும், அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரையிலிருந்து 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது."

    "இன்று 08:00 மணிக்கு விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு செல்லுமாறு செயலாக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அதனுள்ளேயே சில பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமிக்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன."

    "ஆனால், அதில் உள்ள சமிக்ஞைகளை கிரகிக்கும் 'ரிசீவர்' கருவி அணைக்கப்படவில்லை. சூரிய ஒளியிலிருந்து பெறும் சக்தி நின்றவுடன் பிரக்யானுக்கு அருகில் லேண்டர் உறக்க நிலைக்கு சென்று விடும். செப்டம்பர் 22 அன்று பிரக்யானும், விக்ரமும் மீண்டும் விழிப்பு நிலைக்கு வரும்," என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    லேண்டர் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேலே கிளம்பியது உட்பட அதன் சமீபத்திய செயல்கள் குறித்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

    • ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக நிகர் ஷாஜி இருக்கிறார்.
    • விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    ஆதித்யா எல்-1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த நிகர் ஷாஜி இருக்கிறார். அவரை பாராட்டி, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சுலைமான் நபி பள்ளிவாசல் வாசலில் ஜமாத் சார்பில் பள்ளி பேஷிமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    பின்னர் விஞ்ஞானி நிகார்ஷாஜியின் சகோதரர் சேக் சலீமுக்கு ஜமாத்தின் சார்பில் ஜமாத்தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். தொடர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஞ்ஞானி நிகார்ஷாஜி சகோதரர் சேக்சலீம், ஜமாத் தலைவர் செய்யதுபட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
    • விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

     

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ. (ILSA) கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரவித்து இருக்கிறது. நிலவில் ஏற்பட்ட அதிர்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்து உள்ளது. ஐ.எல்.எஸ்.ஏ. கருவியானது பெங்களூருவில் டிசைன் செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
    • பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சல்ஃபர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்து இருக்கிறது. இத்துடன் நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது.

    பிரக்யான் ரோவரில் உள்ள லேசர்-இன்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோ-ஸ்கோப் (Laser-Induced Breakdown Spectroscope) என்ற கருவி நிலவில் தனிமங்கள் இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தி இருக்கிறது.

    • ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது
    • கியூரியாசிட்டி ரோவரை அட்லஸ் வி-451 ராக்கெட்டில் 2011 நவம்பரில் அனுப்பியது

    இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திரயான்-3, ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவ மேற்பரப்பை தொட்டது.

    இதில் உள்ள "விக்ரம்" எனும் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து "பிரக்யான்" எனும் ரோவர் வாகனம் கீழிறங்கியது. திட்டமிட்டபடி பிரக்யான் ரோவர், நிலா குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பூமிக்கு அனுப்பும்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் நிலவிலிருந்து ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது. பாறை நிறைந்த சாம்பல் நிற மேற்பரப்பை காட்டிய இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர்.

    ஆனால் இதனை ஆய்வு செய்த போது, இந்த வைரல் வீடியோவின் 02:40 நிமிடத்தின் போது "நாசா" (NASA) மற்றும் "மார்ஸ்" (செவ்வாய் கிரகம்) எனும் வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனை மேலும் ஆய்வு செய்ததில், செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் நாசா எனும் தேசிய வானியல் மற்றும் விண்வெளி அமைப்பு, அட்லஸ் வி-451 எனும் ராக்கெட்டில் 2011 நவம்பர் 26 அன்று அனுப்பி வைத்த விண்கலன், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 5, 2012 அன்று தரையிறங்கியதும் அதன் ரோவர் வாகனமான, கியூரியாசிட்டி (Curiosity), தனது மாஸ்ட்-காம் (Mastcam) கேமரா மூலம் எடுத்து அனுப்பிய வீடியோ இது என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் சாம்பல் நிறமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தருகின்ற தகவல்கள் அனைத்தையும் உண்மை என நம்புவது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×