search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளென் மேக்ஸ்வெல்"

    • ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள்.
    • அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்வமில்லாதது போல் தெரிகிறது.

    ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.

    அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.

    இவ்வாறு திவாரி கூறினார்.

    • ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.

    இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிவ்யூ மூலம் அவுட் இல்லை என தெரிய வந்தது.

    இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய தினேஷ் கார்த்திக், தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு ஷாக் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் நான் இருக்கிறேன் என அதிரடி காட்டிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

    • ராஜஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார்.
    • டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.

    இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுனில் நரைன் (44 முறை) உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:-

    18 - தினேஷ் கார்த்திக்

    18 - கிளென் மேக்ஸ்வெல்

    17 - ரோஹித் சர்மா

    16 - பியூஷ் சாவ்லா

    • ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதம் அடித்துள்ளார்.
    • மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

    ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை சூர்யகுமார் பகிர்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் மேக்ஸ்வெல், வார்னர் சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 399 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 106 ரன்னும், வார்னர் 93 பந்தில் 104 ரன்னும் குவித்தனர்.

    தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 90 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 309 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இந்நிலையில், உலக கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

    இவர் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியின் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேக்ஸ்வெல்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.
    • அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டி20 தொடர் நிறைவடைந்த பின்னர் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதை முன்னிட்டு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் டி20 தொடருக்கான அணியிலிருந்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×