என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதித்யா எல் 1"
- ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.
- சூரிய புயலின் போது ஏற்பட்ட நிகழ்வை சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் புதிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 மே 11 அன்று பூமியைத் தாக்கிய பெரிய சூரியப் புயலின் விரிவான புகைப்படங்களை ஆதித்யா எல்1 விண்கலத்திலிருந்து வழங்கியுள்ளது.
சூரியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய சூரிய புள்ளிகளில் ஒன்றான AR13664 என்ற செயலில் உள்ள பகுதி, மே 8-9 தேதிகளில் கரோனல் மாஸ் எஜெக்ஷன்களுடன் (CMEs) தொடர்புடைய பல சக்திவாய்ந்த எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்புகளை வெடித்தது, இது பூமியில் இந்த புவி காந்த புயலை தூண்டியது.
சூரிய புயல் தாக்கியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளிநிகழ்வை பார்க்க முடிந்தது.
இந்த ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.
பூமியை சூரிய பூயல் தாக்கும்போது மின்கட்டமைப்புகள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
இதனிடையே சூரிய புயலால் வானில் உருவான ஒளிவெள்ளத்தை கண்டு ரசித்த மக்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். துருவ ஒளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த சூரிய புயலின் போது ஏற்பட்ட நிகழ்வை சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் புதிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
"SUIT மற்றும் VELC கருவிகள் மே 2024 இல் சூரியனின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளைப் படம்பிடித்துள்ளன.
கரோனல் வெளியேற்றங்களுடன் தொடர்புடைய பல எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்பு, குறிப்பிடத்தக்க புவி காந்த புயல்களுக்கு வழிவகுத்தது" என்று கூறப்பட்டுள்ளது.
- கடந்த செப்டம்பர் 2-ந்தேதி ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
- சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
பெங்களூரு:
சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி 'ஆதித்யா-எல்1' விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சூரியனை நோக்கி ஆதித்யா-எல்1 விண்கலத்தின் பயணத்தை இஸ்ரோ கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று மாலை அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
இன்று மாலை சுமார் 4 மணிக்கு லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள 'ஹாலோ' சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அந்த இடம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
அந்த இடம், எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான இடம் ஆகும். விண்கலம் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் சூரியனின் எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும். இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும்.
சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி,ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விண்கலங்களை அனுப்பி உள்ளன. ஆதித்யா திட்டம் வெற்றி பெற்றால் அந்த வரிசையில் இந்தியா 5-வது நாடாக இணையும்.
- பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
- கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஈடுபட உள்ளது. பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறிய ஆதித்யா-எல்1 விண்கலம் தற்போது 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும்.
- சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்தது.
பெங்களூரு:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இன்று 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துள்ளது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும்.
- 19-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 15-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4-வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 19-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும்.
- 15-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 10-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 15ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி நேற்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.
3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறது.பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி நேற்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்நிலையில், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதாவது, ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்கான லாக்ரேஞ்சு புள்ளி இருக்கும் இடத்திற்கு 4 மாத பயணத்திற்கு பின்னரே சென்று சேரும் என்றும் அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
- 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.
சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட் திட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சியின் உச்சத்திற்கு சென்று பெருமைபடுத்தி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
அதில் ஒருவர் தான் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி. தமிழ்நாட்டின் செங்கோட்டையைச் சேர்ந்தவர் நிகர் ஷாஜி. 59 வயதான இவர் அரசு பள்ளியில் படிப்பை முடித்தார். 10ம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் இடம். 12ம் வகுப்பில் பள்ளியில் முதல் இடம்.
பின்னர், திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஷாஜி ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எம்.டெக் பட்டம் பெற்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில் இருந்த ஆர்வத்தில் இருந்த ஷாஜி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார்.
அங்கு, பல்வேறு விண்கல திட்டங்களில் தனது பணியை முழு அர்ப்பணிப்போடு செய்து வந்தார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா எல்1 விண்கல தட்டத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார்.
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக சூரியனின் ஆய்வுக்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவிய நிகர் ஷாஜி இன்று மேடையேறி "கனவு நிறைவேறிவிட்டதாக" பெருமையுடன் கூறினார்.
இதுகுறித்து ஆதித்யா எல்1 வெற்றி குறித்து நிகர் ஷாஜி கூறுகையில், " நான் எட்டு ஆண்டுகளாக இந்த சிக்கலான திட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இது ஒரு சவாலான திட்டம். ஒளிவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இன்று கனவு நிறைவேறிவிட்டது" என்றார்.
நிகர் ஷாஜியின் கணவர் மெக்கானிக்கல் இன்ஜினியர், துபாயில் பணிபுரிகிறார். மகன் பிஎச்.டி படித்து நெதர்லாந்திலும், மகள் தகுதியான மருத்துவராகவும் முதுகலை படித்து வருகிறார்.
ஏற்கனவே, சந்திரயான்-2 திட்டத்தில் திட்ட இயக்குநர் எம்.வனிதா மற்றும் மிஷன் இயக்குநர் ரிது கரிதால் ஸ்ரீவஸ்தவா ஆகிய இரு பெண்கள் முக்கியப் பங்காற்றினர். இதேபோல் சந்திரயான்-3 திட்டத்திலும் துணை இயக்குனர் கல்பனா முக்கிய பங்கு வகித்தார்.
- ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
- விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்.
சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக இஸ்ரோ அறிவிப்பு.
- ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக விஞ்ஞான முயற்சிகள் தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்