search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊக்குவித்தல்"

    • பாராட்டு என்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது.
    • குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்க்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்த குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும் போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளை பாராட்டும்போது, எந்த செயலுக்காக பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.

    பாராட்டுகளை பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சரியப் பார்வையோ, தலைகோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச்செல்வதோ, பிடித்த உணவை சமைத்து தருவதாகவோ கூட இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் பாராட்டுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

     நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப் பாராட்டும் தன்மையை குழந்தைகளிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பழக்குங்கள். இது அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும்போதும், போட்டிகளில் வெற்றி பெறும்போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்த திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியாகவும், சமூக ரீதியாகவும் தேவையானது. அதை தவறாமல் வழங்குங்கள்.

    • வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி தஞ்சாவூர், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவத்தைப் பற்றி ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் மொத்தம் 80 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான வழிகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இப்பயிற்சி வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகளுக்கு ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் வெங்கட்ராமன், குலோத்துங்கன், திருமுருகன், மதியழகன், பத்மவாதி, சுசித்ரா ஆகியோர் மாவட்ட கருத்தாளராக செயல்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பங்கேற்பினை அதிகரித்தல், துணை குழுக்கள் அமைத்தல், உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்தல் மற்றும் செயலி வழி பள்ளி மேம்பாட்டு திட்டமிடலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சியானது நடை பெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு பற்றிய மேற்பார்வை மற்றும் துணை குழுக்கள் பற்றிய அறிமுகம் மேலும், பெற்றோர் செயலையும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டமும் நடந்தது. நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன், தமிழ்நாடு கல்வி பெல்லோவ்ஷிப் ஒருங்கிணைத்தனர்.

    • சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது.
    • ஓய்வுக்கும், சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு உள்ளது.

    சோம்பேறித்தனத்தில் இருந்து நாம் எப்படி வெளியே வருவது என்பதை நாம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தை தவிர்த்துவிட்டு ஒருசில எளிய வழிகளை பார்க்கலாம்.

    சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது. இந்த சோம்பேறித்தனம் நம்மகிட்ட ஏற்படுவதற்கு முதலில் என்ன காரணம் என்று பார்த்தால் நாம் எடுக்கும் ஓய்வுக்கும், சோம்பேறித்தனம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. வேலைநிறைய செய்துவிட்டு அத்தகைய வேலைப்பளுவின் காரணமாக எடுப்பது தான் ஓய்வு.

    ஆனால் வேலையே செய்யாமல் வேலைசெய்தமாதிரி ஓய்வு எடுத்துக்கொள்வது தான் சோம்பேறித்தனம். அது ஏன் நமக்கு ஏற்படுகிறது என்றால் பலவகையான காரணங்கள் உள்ளது. அதைவிட்டுவிட்டு சோம்பேறித்தனத்தை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.

    முதல்வழி என்னவென்றால் நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக வேலை செய்வதால் இந்த சோம்பேறித்தனமா அல்லது நீண்டதூரத்துக்கு பயணம் செய்வதால் சோம்பேறித்தனம் வருகிறதா? ரத்த சோகையால் சோம்பேறித்தனமா, ஹார்மோன் இம்பேலன்ஸ்டு என்னும் நோயால் சோம்பேறித்தனம் உள்ளதா, இந்த சோம்பேறித்தனம் ஏன் என்று நமக்கு ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்தி அட்டவணைப்படுத்த வேண்டும்.

    இரண்டாவதாக சோம்பேறித்தனம் நம்மை விட்டு அகலவேண்டும் என்றால் நாம் நம்முடைய செயலை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். நம் வேலையை பிறகு செய்துகொள்ளலாம் என்னும் வார்த்தையை சொல்லவே கூடாது. ஒரு விஷயம் சொல்வார்கள் நன்றே செய். அந்த நன்றும் அன்றே செய். நாம சொல்லக்கூடிய நல்ல விஷயங்களை இன்றே செய்ய வேண்டும். அதுவும் அன்றே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் என்றால் கண்டிப்பாக சோம்பேறித்தனம் அண்டவே அண்டாது.

    மூன்றாவதாக ஓய்வே இல்லாமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்கள் நமக்கு ஒருவித சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமோ அதே அளவுக்கு தூக்கம் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். இரவில் நன்றாக உறங்கினால் மட்டுமே பகலில் சோம்பேறித்தனம் நமக்கு வரவே வராது. ஆனால் நாம் தற்போது நமது உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு நீண்டநேரம் செல்போனிலேயே பொழுதை கழிக்கிறோம். அதுவும் ஒரு காரணம்.

    நாம் செல்போனில் பொழுதை கழிப்பதில் ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் நேரம் விரையமாகுமே தவிர எந்த பலனும் இருக்காது. சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.

    நான்காவதாக ஒரு செயலை செய்கின்றபோது அதனால் நமக்கு என்ன நன்மை கிடைகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு உடற்பயிற்சி செய்வதால் நமக்கு உடல் இளைக்கும், பார்ப்பவர்கள் நம்மை பாராட்டுவார்கள், ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து உடற்பயிற்சி எடுக்கவில்லை என்றால் உடல் கெட்டுவிடும், உடல் எடை அதிகரிக்கும், பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அது நமக்கு பலவீனத்தை கொடுக்கும்.

    ஒரு செயலை நாம் எப்போது சிறப்பாக செய்யும் போது அதனால் கிடைக்கும் பலன்களும் அதிகமாக இருக்கும். ஒரு செயலை செய்யாமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நாம் யோசித்து செயல்பட்டால் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.

    ஐந்தாவதாக நாம் நம்மை முதலில் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் சரியாக தான் செய்கிறேன். என்னுடையை வேலையை நான் சிறப்பாக செய்துள்ளேன். என்னால இந்த செயலை செய்ய முடியும். என்னால் வெற்றிபெற முடியும் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொண்டால் சோம்பேறித்தனத்தில் இருந்து வெளியே வரலாம்.

    ஆறாவதாக நாம நமக்கு ஒரு லட்சியத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும். எடுக்கும் லட்சியத்தை சிறிய விஷயத்தில் எடுக்க வேண்டும். ஒருவேளை பெரிய லட்சியத்தை எடுத்து அதை சாதிக்க முடியாமல் சென்றால் அதை இந்த சமூகம் கேளிக்கூத்தாகத் தான் பார்க்கும். எனவே நம்மை இன்னும் சோம்பேறித்தனத்திற்குள் தள்ளிவிடும். நாம் நம் முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் சிறிய சிறிய லட்சியங்களை தேர்வு செய்து வெற்றிபெறலாம். நமக்கு அது ஒரு உற்சாகத்தை கொடுக்கும். எனவே படிப்படியாக வாழ்த்துகளையும், மற்றவர்களின் பாராட்டுகளையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும். சோம்பேறித்தனம் நம்மை அண்டவே அண்டாது என்பதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம்.

    • குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.
    • அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    பொதுவாகவே குழந்தைகளுக்கு முதலாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அதை முடிப்பதற்கும், அவர்கள் தங்களுடைய பாடங்களை புரிந்து படிப்பதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சில குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு சிரமப்படுவார்கள். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் தான் பொறுப்பு. நாம் எப்போதும் குழந்தைகளை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். உன்னால் முடியும். இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும், இதை செய்தால் நான் உனக்கு பரிசு தருவேன் என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதுமே குழந்தைகளை பாசிட்டிவ் முறைகளை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க கூடாது. அது அவர்கள் மனநிலையை மாற்றி படிப்பின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே முதலில் ஏன் உன்னால் படிக்க முடியவில்லை. ஏன் படிப்பில் உனக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டாம்.

    நாம் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால் அந்த பாடங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் புரிந்து பாடங்களை படிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் வழக்கமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான சில வழிகள்:

    தினசரி அட்டவணையை உருவாக்குவது மற்றும் அதை ஒட்டிக்கொள்வது. அது குழந்தைகளை மிகவும் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் நேரத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    மற்றொரு வழி, படிக்கும் இடத்தை உருவாக்குவது. குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    ஓய்வு எடுப்பதும் முக்கியம்- குழந்தைகள் பல மணிநேரம் படிப்பதை விட, மூளைக்கு ஓய்வு அளிக்க இடையிடையே சிறிய இடைவெளிகளை எடுக்க வேண்டும். அவர்களின் தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்த பிறகு அல்லது அவர்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றிய பிறகு, குழந்தைகளுக்கு பரிசு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊக்கத்துடன் இருக்க உதவும்.

    குழந்தைகள் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும் - அது பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆசிரியரியர்களிடம் இருந்து தயங்காமல் உதவியை கேட்டு பெறுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இறுதியாக, குழந்தைகள் பாடங்களையோ அல்லது வீட்டுபாடங்களையோ ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும்- ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், குழந்தைகள் அதை கடைசி நிமிடம் வரை ஒத்திவைப்பதற்கு பதிலாக உடனடியாக அதை செய்ய அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    இந்த படிகள் பிள்ளைகளின் படிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவும், அது அவர்களின் கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

    பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு நேர்மறையான படிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுவதில் நீங்கள் முக்கிய பங்குவகிக்கிறீர்கள்.

    முதலில், உங்கள் படிப்பில் (நீங்கள் இன்னும் பள்ளியில் இருந்தால்) அல்லது வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியம். குழந்தைகள் உதாரணம் மூலம் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள், எனவே கற்றல் என்பது அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்குக் உணர்த்துவது முக்கியம்.

    இரண்டாவதாக, உங்கள் வீட்டில் கற்க ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை அறையின் அமைதியான மூலையாகவோ அல்லது ஒரு தனி அறையாகவோ இருக்கலாம். கவனச்சிதறல்கள் இல்லாத மற்றும் உங்கள் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய பகுதியாக இது இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக, உங்கள் பிள்ளைக்கு ஒரு வழக்கமான படிப்பு அட்டவணையை உருவாக்க உதவுங்கள். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும்.

    அடுத்து, உங்கள் பிள்ளையின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருங்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் சிரமப்பட்டால் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உதவுங்கள். குழந்தைகள் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக உணரும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள், எனவே அவர்களின் படிப்பு முழுவதும் உங்கள் ஊக்கத்தை அவர்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இறுதியாக, ஏராளமான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளியில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறனை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

    ×