என் மலர்
நீங்கள் தேடியது "எலும்பு முறிவு"
- காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் (வயது 53). இவரின் மகள் பவித்ரா (25) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சிறுகரும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தின இரவு ஆயர்பாடி கிராமத்தை ேசர்ந்த மணிகண்டன்(32) என்பவர் பவித்ராவுக்கு போனில் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் தாக்கப்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, விஜயன், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் அவளூர் போலீசார் கைது செய்தனர்.
- இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.
- வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு வகுப்பு இடைவேளை விடப்ப ட்டது. அப்போது மாணவிகள் வெளியில் அமர்ந்து பேசிக்கொ ண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாணவியின் பின்புறம் அடித்துள்ளார். இதில் அந்த மாணவியின் கையில் பலத்த அடிபட்டது. வலி தாங்காமல் துடித்த மாணவி, பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றார்.
நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் மாணவியை உடனடியாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் வேப்பூர் போலீ சாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா உத்தரவிட்டார். அதன்படி வேப்பூர் போலீசார் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு சென்று மாணவி யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
- செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர
கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.
இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
- துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
- பாகிஸ்தான் அதிபர் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி துபாயில் விமானத்தில் இருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடந்த புதன்கிழமை துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார். இதில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இன்னும் நான்கு வாரங்கள் சிகிச்சையில் இருப்பர். மேலும் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.
- முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது.
- எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சி குழுவினர் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம், பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்சி அபடைட்டை செயற்கை முறையில் தயாரித்து உள்ளனர்.
அதாவது முட்டை ஓடுகளில் இருந்து இந்த கனிமத்தை தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓடுகளை விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கும், பல் மற்றும் எலும்பு உள் வைப்புகளுக்கான பூச்சுகளாகவும், எலும்பு திசு பொறியியல் பயன்பாடுகளுக்கான சாரக் கட்டுகளாகவும் பயன்படுத்தலாம். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-
விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கு முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எலும்பு விரிசல்களை குணப்படுத்த ஐந்தில் ஒரு பங்கு செலவு குறையும்.
இந்த முட்டை ஓடுகளை 100 டிகிரி சென்டிகிரேட்டில் மைக்ரோவேவ் கதிர்வீச்சை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றில் ஹைட்ராக்சி அபடைட் சோதனை செய்யப்பட்டது.
ஒரு கிலோ முட்டை ஓட்டில் இருந்து ஒரு கிலோ ஹைட்ராக்சி அபடைட்டை தயாரிக்கலாம். முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில் முட்டை ஓடுகள் ஆண்டுக்கு 91 மில்லியன் டன்கள் கிடைக்கிறது.
2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 18 சதவீதமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது முட்டை ஓடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ராக்சி அபடைட்டை கொண்டு விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
தற்போதுள்ள எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஓட்டுகள் விலை உயர்ந்தவை ஆகும்.
எனவே முட்டையில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி அதன் மூலம் எலும்பு விரிசல்களை சரிசெய்யும் இந்த முயற்சிக்கு பெரியார் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.