search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திர விடுதி"

    • சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    சோழிங்கநல்லூர்:

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

    இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

    இதையொட்டி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன் னேற்பா டுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீ சார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு ளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

    • புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .
    • மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வானூர்:

    புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு காரில் அதிக அளவு மது பாட்டில் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னகா மணன், சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த 2 சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர் .

    அதில் உயர் ரக புதுச்சேரி மதுபாட்டில்கள் 650 இருந்தது தெரியவந்தது. மேலும் காரில்வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் புதுச்சேரியில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து மது பாட்டில்களை கடத்திய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 650 உயர்ரக மது பாட்டில்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான செல்வராஜ் மீது விழுப்புரம் மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×