search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானக் கடை"

    • இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அத்துமீறல்.
    • பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் சாலையோரம் இருந்த மதுபானக் கடை அருகே கடந்த செவ்வாக்கிழமை இரவு 8 மணியளவில் இளம் பெண் ஒருவர் மார்கெட்டுக்கு சென்றுவிட்டு தெருவோரமாக சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் இருந்து நபர் ஒருவர் திடீரென பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அப்போது அந்த பெண் அலறி சத்தம் போட்டதை அடுத்தும், அந்த வழியாக பொது மக்கள் வருவதை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து, ராவத்பூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

    • சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இந்த சிலைகள் விஜர்சனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ×