என் மலர்
நீங்கள் தேடியது "ஆதி திராவிடர் விடுதி"
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து உலக சுற்றுலா தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகிறது. அதனடிப்படையில் கடந்த மாதம் 27-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடற்கரை சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சமூக பாதுகாப்புத்துறை மற்றும் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்பட்டுவரும் விடுதி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வட்டக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அதற்கான 3 சுற்றுலா விழிப்புணர்வு வாகனங்கள் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள விடுதிகளிலிருந்து 16 மாணவ, மாணவியர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள விடுதிகளிலிருந்து 30 மாணவ, மாணவியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுலா வாகனத்தில் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ் குமார், உதவி சுற்றுலா அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுபாப்பு அலகு அலுவலர் (பொ) பியூலா மற்றும் பாதுகாவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
- கோதையாறு சாலையை சீரமைக்க பல முயற்சிகள் செய்தோம், சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கிறது.
திருவட்டார் :
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி பேச்சிப்பாறை கடம்பமூடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சங்கரலிங்கம் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது :-
குமரி மாவட்டத்தில் 488 பழங்குடி குடும்பங்களுக்கு தற்போது பட்டா வழங்கும் வகையில், பரிசீலினை செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களை கஷ்டத்திற்கு ஆளாக்ககூடாது என்று மாவட்டத்தில் தற்போது அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
முன்பெல்லாம் குமரி மாவட்ட சாலைப் பணிகளுக்கு அதிக பட்சம் 40 முதல் 45 கோடி ரூபாய் தான் வரும். ஆனால் இப்போது ஆண்டுக்கு ரூ. 200 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் செய்யப்படுகிறது. கோதையாறு சாலையை சீரமைக்க பல முயற்சிகள் செய்தோம், ஆனாலும் சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கிறது.
தற்போது வனத்துறை மூலமாகதான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் விஷயத்தில் மக்கள் யாரும் அதிருப்தி கொள்ள தேவையில்லை. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி உங்களுக்கு நன்மை செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் நன்றி கூறினார். மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், வன உரிமைக் குழு மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ்காணி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
பொன்மனை பேரு ராட்சிக்கு உட்பட்ட வண்ணாரங்கோடு பகுதியில் உள்ள இளைஞர்க ளின் கோரிக்கையை ஏற்று தொகுதி எம்.எல்.ஏ நிதியில் இருந்து சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன், பேருராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி, தி.மு.க. பேரூர் செய லாளர்கள் ஜெபித்ஜாஸ், சேம் பெனட் சதீஷ், ஜான், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜே.எம்.ராஜா, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திற்பரப்பு பேருராட்சிக்குட்பட்ட கோட்டூர் கோணம் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டுவதற்க்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார். பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், தலைவர் பொன்.ரவி, வார்டு உறுப்பினர் மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொன்மனை மற்றும் மனியன் குழி பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தையும் அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் அனஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் வினு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்