search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய விளையாட்டு 2023"

    • இந்தியா 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
    • உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் பெருமை அடைகிறேன்.

    140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

    உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் காரணமாக நாடு முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது.

    உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும் என தெரிவித்தார்.

    • அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது.
    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து மேலும் இன்றைய ஆட்ட முடிவில் மேலும் 7 பதக்கள் கிடைத்தன. அதன்படி, இன்றைய நாளில் மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்தியாவிற்கான ஆட்டங்கள் முடிவடைந்தன. ஆசிய விளையாட்டு போட்டிகளின் முடிவில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது. மகளிர், ஆடவர் செஸ் அணிகள் பிரிவில் வெள்ளி பதக்கம். வில்வித்தையில் ஓஜஸ் மற்றும் ஜோதி தங்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    19வது ஆசிய விளையாட்டு போட்டியின் கடைசி நாளான நாளை பிற நாடுகள் விளையாடும் ஒரு சில போட்டிகள் உள்ளன. அதன்பிறகு, ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நடைபெறும்.

    • ஆசிய விளையாட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
    • இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்று இருக்கிறது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் இந்தியா, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வீரர்களை களமிறக்கி உள்ளது.

    அதன்படி ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்த எக்ஸ் பதிவில், ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த பிரித்விராஜ் தொண்டைமான், டென்னிஸ்-இல் வெள்ளி பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

    • துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தோமர் வெண்கலம் வென்றார்.
    • சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

    சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி இரண்டாவது வெண்கலம் வென்றது.
    • சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டாவது வெண்கலம் வென்றனர். இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் ஆகியோர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது.
    • உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர்.

    ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

    உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது.
    • கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி சார்பில் திவ்யான்ஷிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாட்டீல், பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.

    கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×