என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள் - பதக்கம் வென்றவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்
- இந்தியா 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
- உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் பெருமை அடைகிறேன்.
140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் காரணமாக நாடு முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது.
உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும் என தெரிவித்தார்.