என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா தினம்"
- தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது.
- தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்றுலாவை வழி நடத்தினார்.
தஞ்சாவூர்:
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று 1-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு, தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடை பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்பட ப்போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்நிலையில் நிறைவு நாளான நேற்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், புதுக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் 35 பேருக்கு இன்ப சுற்றுலா தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கலெக்டரின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் தஞ்சை தாரகைகளின் ஒருங்கி ணைப்பாளர் மணி மேகலை தலா ஒரு ஜோடி தலையாட்டி பொம்மையை நினைவு பரிசாக வழங்கினார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்று லாவை வழி நடத்தினார்.
- சுருளி அருவியில் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
- சுருளி அருவி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனி:
தேனி அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து கடந்த 27ந்தேதி முதல் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி வருகிற 2ந் தேதி வரை நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உலக சுற்றுலா தினம் மற்றும் சுருளி சாரல் திருவிழாவினை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் சுருளி அருவி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
போடி ஏல விவசாய சங்க கல்லூரியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சுருளி அருவி பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம், உணவருந்தும் இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு இணையான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரக புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், சுருளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள் சித்ராதேவி, காயத்ரி, வன சரக அலுவலர் பிச்சைமணி, சுற்றுலா அலுவலர் (பொ) பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
- 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது.
புதுச்சேரி:
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து, உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்டத்தில் கபடி போட்டி, பீச் வாலிபால் போட்டி, மணல் சிற்பம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதன் தொடக்க நிகழ்வாக, நேற்று காலை, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற சுற்றுலாத்துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் வினாடி- வினாடி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேகா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.