search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிசந்திரன் அஸ்வின்"

    • அஸ்வின் 2 ஆவது இன்னிங்சில் 96 விக்கெட்டுகள் வீழ்த்தி கும்ப்ளே சாதனையை முறியடித்தார்.
    • அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியர்கள் பட்டியலில் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.

    இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் 94 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை 96 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் முறியடித்துள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்குள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஷ்வின் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியல்:

    67 - முத்தையா முரளிதரன்

    37 - ரவிச்சந்திரன் அஸ்வின்

    37 - ஷேன் வார்னே

    36 - ரிச்சர்ட் ஹாட்லீ

    35 - அனில் கும்ப்ளே

    • முதல் இன்னிங்சில் அஸ்வின் சதமடித்து அசத்தினார்.
    • 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.

    இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
    • 2 ஆவது இன்னிங்சில இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.

    3-வது நாள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும். அதே சமயம் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    • அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    சென்னை:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

    அதன் வாயிலாக உலகிலேயே தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100-வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு:-

    "ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்" என்று கலகலப்பாக பேசினார்.

    அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • இந்திய வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
    • 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிசந்திரன் அஸ்வின் சமீபத்தில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி இந்திய வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

    இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிசந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்-இலும் 25.4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

     


    2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் களமிறங்கிய அஸ்வின் 128 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியை போன்றே தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 128 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இத்தனை ஆண்டுகள் விளையாடியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது தாயார் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை கூற முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
    • முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும். 

    இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர். 

    • இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகியுள்ளார்.
    • பி.சி.சி.ஐ., அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. நேற்றிரவு அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பி.சி.சி.ஐ. மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டுள்ளது.

    "ரவிசந்திரன் அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். தனது தாயாருடன் இருப்பதற்காக அவர் ராஸ்கோட் டெஸ்ட்-இல் இருந்து விலகி அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார்," என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    • இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
    • 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களை எட்டிப்பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகல்.
    • ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் களமிறங்கி இருக்கிறார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து பலர் ஏமாற்றம் தெரிவித்து இருந்தனர்.

    தற்போது இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருப்பது அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    2011, 2015 என இரு உலகக் கோப்பை தொடர்களில் அஸ்வின் விளையாடி இருக்கும் நிலையில், தற்போது 2023 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம், மூன்றாவது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் விளையாட இருக்கிறார்.

    ×