search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது.
    • மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் விவாதம் நடைபெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள்  அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

    அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மெடிக்கல் லீவ் எடுக்குறீங்களா சார் என கேட்டார். இதற்கு பதிலளித்த மோடி, தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து என்று பதில் அளித்தார்.

    மேலும் உரையாடலின்போது தான் தமிழர் என மோடியிடம் ஒருவர் தன்னை  அறிமுகப்டுத்திக்கொள்ளவே உடனே அவரிடம் வணக்கம் என மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த பயணத்தில் பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கப்பட்டது. குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபா, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவம் அளித்துள்ளார்.

    தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற இந்த விருது நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

    இந்தப் பயணத்தின்போது மருந்து, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி குவைத்தின் அமீருடன் ஆலோசனை மேற்கொண்டார். 

    • கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது
    • வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில், அக்.3-

    குமரி மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களும் விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாக னங்கள் வாங்குமாறு நிர்பந் திக்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதன் காரணமாக ஒரு சில கூட்டுறவு வங்கிகள் பணியாளர்கள் இன்றி மூடப்பட்டது.

    அதே சமயம் பல வங்கிகளில் ஒரு சில பணியாளர்களுடன் இயங்கியது. பணியாளர்கள் போராட்டம் காரணமாக பணிகள் முடங்கின. கடந்த 2 நாட்கள் விடுமுறைகளுக்கு பிறகு கூட்டுறவு வங்கிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் வங்கிகளில் பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் வின்சென்ட்ராஜ், துணை தலைவர்கள் செல்வின் ஜோஸ், சந்திரகுமார் மற்றும் இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா உள்பட பலர் இணை பதிவாளர் அலுவலகம் முன் திரன்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×