search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வியறிவு"

    • வெற்றி பெற்ற 105 வேட்பாளர்களில் சுமார் 19 சதவீதத்தினர் 5 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடைப்பட்ட கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்.
    • 34 வேட்பாளர்கள் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 65 பேர் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையின்படி,

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லை என்று குறிப்பிட்டிருந்த 121 வேட்பாளர்களும் தோல்வியடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் சமூகப்பணியை முக்கிய தொழில்களாக இருந்தன.

    வெற்றி பெற்ற 105 வேட்பாளர்களில் சுமார் 19 சதவீதத்தினர் 5 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடைப்பட்ட கல்வித்தகுதிகளை பெற்றவர்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 2 பேர் 5-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 2 பேர் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள்.

    தேர்தலில் வெற்றி பெற்ற 420 வேட்பாளர்களில் 77 சதவீதத்தினர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேல் பட்டம் மேற்பட்டவர்கள். 17 பேர் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஒரு வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் கல்வியறிவு பெற்றவர்.

    இதில் 34 வேட்பாளர்கள் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 65 பேர் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களின் சங்கத்தின் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • குழந்தை திருமணங்களுக்கு வறுமை, கல்வியறிவின்மையே காரணமாகும் என வட்டார மருத்துவ அலுவலர் பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறுவயது திருமணங்களால் ஏற்படும் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடத் தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருப்புல் லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் வேளா னுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், குழந்தை திருமணம் பழங்கா லத்திலிருந்தே நடைமுறை யில் இன்றும் சில மாநிலங்க ளில் இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவர் களின் உடல் மற்றும் மன முதிர்ச்சிக்கு முன்பே திரும ணம் செய்து வைக்கப்படுகி றார்கள்.

    குழந்தைத் திருமணங்க ளுக்கான காரணங்கள் வறுமை, வரதட்சணை, கலாச்சார மரபுகள், மத மற்றும் சமூக அழுத்தங்கள், கல்வியறிவின்மை ஆகிய வையாகும். குழந்தைத் திரும ணத்தை முடிவுக்குக் கொண்டு வர, இந்தப் பிரச்சினையை பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரிடையே ஏற்படுத்த வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட சிறு வயது திருமணத்தால் சிறுமி யர்களுக்கு கல்வியும், பொருத்தமான வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. சிறு வயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால் தாயும், சேயும் மகப்பேறின் போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலை மான் சதாம் உசேன் மற்றும் முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×