search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்டி கடை"

    • பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
    • பொதுமக்கள் நடவடிக்கை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    இரணியல், அக்.10-

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை வேளையில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக இரணியல் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

    இரணியல், திங்கள்நகர், பேயன் குழி, மைலோடு, தலக்குளம், செட்டியார் மடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் ரகசியமாக கண்காணிக்கபட்டது.

    இந்த நிலையில் இரணியல் சந்திப்பில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடுத்து கோழி இறைச்சி விற்பனை செய்த கடையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 54) என்பவர் எந்த விதமான அரசு அனுமதியின்றி மது ஊற்றி கொடுப்பது தெரியவ ந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.அதுபோல திங்கள்நகர் நேசமணி பூங்கா எதிராக உள்ள பெட்டி கடையில் அரசு அனுமதி இன்றி மது ஊற்றி கொடுத்த எழிலரசி (56) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகிய அதிகாரிகள் நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்த பொதுமக்கள் நடவடிக்கை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    ×