என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புனித மண்"
- புனித மண் டெல்லி செல்கிறது
- பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
மதுரை
நேரு யுவகேந்திரா சார்பில் என் மண் என் தேசம் என்ற பெயரில் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுடெல்லியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்த பூங்காவிற்கு நாடு முழுவதும் தியாகிகள் வாழ்ந்த பகுதிகளில் மண் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் இருந்து தியாகிகள் வாழ்ந்த இடங்களில் புனித மண் கலசங்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த மண்ணை ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அந்த கலசத்தை கொண்டு வருவர். பின் ஒரே கலசத்தில் அந்த மண்கள் சேர்க்கப்பட்டு புதுடெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
வருகிற 28-30-ந் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 75 ஆயிரம் கலசங்களில் கொண்டு செல்லப்படும் மண் சேர்க்கப்பட்டு பூங்காவில் வைக்கப்படும்.
மதுரையில் நடைபெற்ற புனித மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார், அனில்குமார், தேசிய சேவை தொண்டர்கள் மீனாட்சி, பிரியங்கா, அபிதா, மணிமொழி, தனசேகரன், கணேசன், ராகவ், என்.எம்.ஆர்.மதுரை காந்தி கல்லூரி முதல்வர் கோமதி, மகிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் சில்லரைபுரவு ஊராட்சி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
டெல்லியில் அமைய உள்ள நினைவிடத்திற்கு என் மண் என் தேசம் என்கின்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தென்காசி தெற்கு ஒன்றியம் சார்பில் இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மற்றும் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
தென்காசி தெற்கு ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் அசோக்பாண்டியன், குற்றாலம் கிளை தலைவர் செல்வராஜ், குத்துக்கல்வலசை ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்