என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் தீர்த்தம்"

    • சிலை விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • புராதன கால சிற்பங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவலில் பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. சோழர்கால பாரம்பர்யமும், பழம்பெருமையும் மிக்க இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என 9 தீர்த்தங்கள் உள்ளன.

    இதில் ராமர் தீர்த்தம் ராமபிரான் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ராம பிரான் இலங்கை வேந்தன் ராவணனை போரில் கொன்று சீதையை மீட்டபோது ராவணனின் தம்பி கும்பகர்ணனும் கொல்லப்பட்டான்.

    ராவணனும் அவனது தம்பியான கும்பகர்ணனும் அசுர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் பிரம்ம குலமரபில் வந்தவர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் ராமபிரானை பிரம்ம ஹத்தி தோஷமாக நிழலுருவில் தொடர்ந்தது.

    இதில் ராவணனை கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்திற்காக ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வடிவமைத்து நடத்திய பூஜையில் அந்த தோஷத்தில் இருந்து விடுதலையானார். பாவத்தில் இருந்தும் விடுதலை பெற்றார். ஆனால் கும்பகர்ணனை கொன்ற தோஷம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் ராமன் அயோத்தி செல்லும் பயணம் தடைபட்டது.

    பொன்னியாற்றங்கரையில் தவம் செய்து வந்த முனிவர்களிடம் ராமபிரான் இதற்கு தீர்வு என்ன என கேட்க அதற்கு அவர்கள் ஞானபூமியாகிய வெண்ணாவல் காட்டில் (திருவானைக்காவல் கோவில் அமைந்துள்ள இடம்) சிவலிங்கம் அமைத்து சிவ வழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினர்.

    உடனே ராமனும் ஜம்பு முனிவர் திருக்கோவிலின் மேற்கு பகுதியில் குளம்வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தார். அங்கதனை கொண்டு சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன்னை தொடர்ந்த பிரம்ம ஹத்தி பாவம் நீங்கப்பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. .

    இந்த ராமர் தீர்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இந்த பணிகள் நடந்தபோது குளத்தின் முட்புதரில் கற்சிலை அம்மனின் தலைப்பகுதி மட்டும் தனி யாக கிடந்தது தெரிந்தது. இந்தச் சிலையின் முழு வடிவம் கிடைக்கவில்லை.

    இது காளி சிலையாக இருக்கக் கூடும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். சிலை குறித்த விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராமர் தீர்த்தக் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் இருந்ததால், இந்தக் குளத்துக்குள் அதிக அளவில் கற்சிலைகள் மற்றும் புராதன கால சிற்பங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படு கிறது.

    பழைமையான இந்தக் குளத்தை தூர்வார இந்து சமய அற நிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் கோரிக்கை எதிர்பார்க்கின்றனர்.

    • ராமர் தீர்த்த குளத்தை தூர் வரவேண்டும்.
    • பாசிகளை அகற்றி தூர்வார பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்ன கத்து காசி என்று போற்றப் படும் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித ஸ்தல மாகவும் விளங்குகிறது. ஸ்ரீராமர், சீதை, அனுமன் உள்ளிட்ட தெய்வங்கள் சிவ லிங்கம் செய்து பூஜை செய்த இடமாகும். இதனால் இந் தியா அளவில் முக்கியத்து வம் வாய்ந்த கோவிலாக உள்ளது.

    எனவே தமிழகம் மட்டு மின்றி வடமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியும், கோவிலில் உள்ள 22 தீத்த மாடியும் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபடுகிறார்கள்.

    இக்கோவிலுக்கு சொந்த மான ராமர் தீர்த்தம், லெட்சு மண தீர்த்தம் நகரின் முக்கிய பகுதியில் உள்ளது. இதில், இதில் ராமர் தீர்த்த குளத்தில் நாள் தோறும் ஏராளமான வடமாநில பக்தர்கள், தமிழ் நாடு பக்தர்கள் தீர்த்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் தீர்த்த குளம் பாசி அடந்து மிகவும் மோச மாக காணப்படுகிறது. இத னால் துர்நாற்றம் வீசி வரு கிறதுய. மேலும் தொற்று நோய் பரவிவிடும் என்ற அச்சத்தில் பக்தர்கள் தீர்த்த குளத்தை பயன்படுத்தவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே ராமர் தீர்த்த குளத்தை தூர்வாரி தூய் மைப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை உட னடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    ×