search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஷன் சிங் பேடி"

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் சாதனையை பும்ரா (32) முறியடித்துள்ளார். 

    1977/1978 -ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

    ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள்

    32* 2024/25-ல் ஜஸ்பிரித் பும்ரா

    1977/78-ல் 31 பிஷன் பேடி

    1977/78-ல் 28 பிஎஸ் சந்திரசேகர்

    1967/68-ல் 25 இஏஎஸ் பிரசன்னா

    1991/92-ல் 25 கபில் தேவ் 

    • அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு பிஷன் சிங் பேடி எடுத்துக்காட்டாக திகழ்வார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில், "ஸ்ரீ பிஷன் சிங் பேடி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து கவலையுற்றேன். விளையாட்டின் மீது அவர் கொண்டிருந்த காதல், அவரது அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர் தொடர்ந்து எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார். அவரது குடும்பத்தார், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இடதுகை சுழற் பந்துவீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967 முதல் 1979 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் 22 போட்டிகளில் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

    67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பிஷன் சிங் 266 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பிஷன் சிங் பேடிக்கு மத்திய அரசு கடந்த 1970-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

    ×