search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு"

    • சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • முதல் போடோ திருவிழா இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    2020 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு வன்முறையைத் தவிர்த்து அமைதியின் பாதையை தேர்வு செய்ததற்காக போடோ சமூக மக்களை நரேந்திர மோடி பாராட்டினார். டெல்லியில் நடைபெற்ற முதல் போடோலாந்து திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு போடோ சமூக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போடோலாந்து மஹோத்சவின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, "போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோலாந்து பகுதி 'புதிய வளர்ச்சி அலையை' கண்டுள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இன்று கார்த்திகை பூர்ணிமாவின் புனிதமான நாள். இன்று தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று குருநானக் தேவின் 555வது பிரகாஷ் பர்வ். இந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த தேசத்திற்கும், குறிப்பாக உலகம் முழுவதும் பரவியுள்ள சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

    "இன்று நாடு முழுவதும் ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இன்று காலை, பீகாரில் உள்ள ஜமுய் நகரில் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இப்போது மாலையில், முதல் போடோ திருவிழா இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."

    "கடந்த நான்கு ஆண்டுகளில், போடோலாந்தின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, போடோலாந்து வளர்ச்சி அலைகளை கண்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்தின் நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் முடிவுகளைப் பார்த்து நான் மிகவும் திருப்தி அடைகிறேன்."

    "இன்றைய சந்தர்ப்பம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. 50 வருட இரத்தக்களரி, 50 வருட வன்முறை மற்றும் 3-4 தலைமுறை இளைஞர்கள் இந்த வன்முறையில் நுகர்ந்துள்ளனர். பல தசாப்தங்களுக்குப் பிறகு, போடோ இன்று திருவிழாவைக் கொண்டாடுகிறது. 2020 ஆம் ஆண்டில், போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, கோக்ரஜாருக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பும் பாசமும், நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதுவது போல் உணர்ந்தேன். அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன்."

    "போடோலாந்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி சிறப்பு தொகுப்பு வழங்கியுள்ளது. அசாம் அரசும் சிறப்பு வளர்ச்சி தொகுப்பை வழங்கியுள்ளது. போடோலாந்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது."

    "என்னைப் பொறுத்தவரை, அசாம் உட்பட முழு வடகிழக்குமே இந்தியாவின் அஷ்டலட்சுமிகள். இப்போது வளர்ச்சியின் சூரியன் கிழக்கு இந்தியாவில் இருந்து உதயமாகும், இது வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும். எனவேதான் வடக்கு கிழக்கில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம். வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண நாங்கள் முயன்று வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    • அதிகாரி விளக்கம்
    • வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- குமரி மாவட்டமானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் மாவட்டமாகும். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரிநீர் வடிந்த பின் நடவு, விதைப்பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தல், மழைநீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே குமரி மாவட்ட வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுமாறும், மேலும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×