search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை 2023"

    • 50 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • உலக கோப்பை தொடரின் முதலாவது ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    50 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் இந்த ஆண்டு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், 50 ஓவர் உலக கோப்பை தொடரின் முதலாவது ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும், அந்த போட்டியில் கடந்த உலகக்கோப்பையில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும், அந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • உலக கோப்பை தொடரில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. போட்டி அட்டவணையும் வெளியானது.
    • உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் 5 போட்டிகளில் விளையாடுகிறது பாகிஸ்தான்.

    லாகூர்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் 5 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

    இதற்காக பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி, வெளியுறவுத் துறை மந்திரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா, பங்கேற்காதா என்பது தெரியவரும்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காவிட்டால், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி இஷான் மசாரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த விவகாரத்தில் என் கருத்து என்னவென்றால் ஆசிய கோப்பையை பொதுவான மைதானத்தில் (பாகிஸ்தான் அல்லாமல் இலங்கையில்) விளையாட வேண்டுமென இந்தியா கோரிக்கை வைக்கும்போது, உலக கோப்பையையும் பொதுவான மைதானத்தில் (இந்தியாவில் அல்லாமல் இலங்கை போன்ற பிற நாடுகளில்) விளையாட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுப்போம். இந்த விவகாரத்தில் 11 மந்திரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி முடிவை பிரதமர் ஷெரிப்பிடம் தெரிவிப்போம் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லுமா என்பது குறித்து பிரதமர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண விஐபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    • பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கினார்.

    மும்பை:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

    இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

    இதற்கிடையே, இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலக கோப்பை போட்டிகளை நேரில் காண பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு சச்சின் தெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சட்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சட்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்

    • ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
    • இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.

    உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.

    பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.

    • தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கு பெற திருவனந்தபுரம் வந்தது.
    • மழை காரணமாக பயிற்சி ஆட்டம் நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கு பெறுவதற்காக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாப்ஸ் ஆகியோர் திருவனந்தபுரம் என்ற பெயரை திணறி, திணறி உச்சரித்தனர். கடைசியில் சரியான முறையில் உச்சரித்தனர்.

    திருவனந்தபுரம் என்ற பெயரை வீரர்கள் உச்சரித்ததுடன், சரியாக சொன்னோமா என சிரிப்புடன் காட்சி அளிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 282 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 283 ரன்கள் எடுத்து வென்றது.

    அகமதாபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட்

    77 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனது பெற்றோர் பிறந்த ஊர் பெங்களூர். உண்மையில் அங்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட இருக்கிறேன். இந்தப் போட்டியில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    பெங்களூர் என்றால் எனது குடும்பம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் நான் பெங்களூரில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளேன்.

    தந்தை ரவி கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால்தான் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நினைவாக எனக்கு ரச்சின் ரவீந்திரா என்ற பெயரை சூட்டினார் என தெரிவித்தார்.

    • கடந்த 10 ஆண்டாக ஐ.சி.சி.கோப்பை எதனையும் இந்திய அணி வெல்லவில்லை.
    • உலக கோப்பையில் சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்குமா என்று இந்திய ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    சென்னை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதால் திடமான நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களமிறங்குகிறது.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆடுகிறார்கள்.

    தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என தெரிகிறது. இது இந்திய அணிக்கு இழப்பாகும். அவர் ஆடாவிட்டால் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் காண வாய்ப்புள்ளது.

    பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி.கோப்பை எதனையும் வெல்லாத குறையை போக்க தீவிரமாக தயாராகி வரும் இந்திய அணி, இந்த உலக கோப்பையில் சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் பொருந்தியதாக திகழ்கிறது.

    பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேனும், பந்துவீச்சில் ஹேசில்வுட், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஆல்-ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அந்த அணியின் ஆணிவேராக உள்ளனர். மொத்தத்தில் வலுவான இரு அணிகள் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு மழை பாதிப்பு இருக்காது என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 149 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 83-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இந்தியாவும் வென்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

    ஆஸ்திரேலியா:

    டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுசேன், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

    • சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • உலக கோப்பை போட்டிக்காக இன்று இரவு 12 மணி வரை சேவை நீட்டிப்பு என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    வலுவான இரு அணிகள் போட்டியிடுவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல், வரும் 13, 18, 23, மற்றும் 27 ஆகிய நாட்களிலும் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டைக் காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.
    • 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்தது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வருகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

    இதில், அலெக்ஸ் கேரி ரன் எடுக்காமல் அவுட்டானார். இந்திய அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி பின்னர் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சால் தடுமாறியது.

    இதில், 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்தது.

    இதைதொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் விராட் கோலி 85 ரன்களும், லோகேஷ் ராகுல் 97 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 ரன்களும் எடுத்தனர்.

    இந்நிலையில் இந்தியா அணி 41.2 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • 115 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது
    • விராட் கோலி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கே.எல். ராகுல் 97 ரன்கள் அடித்து சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் 91 ரன்கள் இருக்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது.

    41-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் முதலில் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். ஸ்கோர் சமன் ஆகிவிடும். அதன்பின் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதோடு சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கே.எல். ராகுல் நினைத்தார்.

    ஆனால், 2-வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனை தாண்டி சிக்ஸ் சென்று விட்டது. இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்தார்.

    சிக்ஸ் சென்றதும், அடடே... சிக்ஸ் போய்விட்டதே... என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.

    இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல். ராகுல்- விராட் கோலி ஜோடி அபாரமான விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    ×